என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 3 பேர் கைது
- குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிகொண்டிருந்த ராமு (36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- விவசாயி நாகமணியை ஆபாசமாக பேசிய அதே பகுதியை சேர்ந்த முனியப்பன(32) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் புதிய வீடடு வசதிவாரியம் ஆட்டோ ஸ்டேண்ட் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிகொண்டிருந்த கிருஷ்ணகிரி கோ-ஆப் காலணி 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்த நித்தீஷ் (வயது 25), மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல் ஒசூர் டவுன் போலீசார் பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிகொண்டிருந்த ராமு (36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் தாசம்பட்டி கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வரட்டம்பட்டி விவசாயி நாகமணியை ஆபாசமாக பேசிய அதே பகுதியை சேர்ந்த முனியப்பன(32) என்பவரை கைது செய்தனர்.






