என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை கடத்திய டிரைவர் கைது
- நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானாள்.
- போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரேம்குமார் நேற்று சிறுமியை பர்கூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இதனிடையே நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானாள்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது பர்கூர் அடுத்த தபால்மேடு இந்திரா நகரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் பிரேம்குமார் (வயது22) என்பவர் சிறுமியை கடத்திசென்றது ெதரியவந்தது.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரேம்குமார் நேற்று சிறுமியை பர்கூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். தேனி மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் பிரேம்குமாரை கைது செய்தனர்.






