என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நேற்று மதியம் ரஞ்சித் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த ரஞ்சித் சுத்தியலை எடுத்து மனைவி ேராஜாவின் தலையில் அடித்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மாதரசனப்பள்ளி அருகே உள்ள செம்மண் குழி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது30), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் ரஞ்சித் சந்தேகப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரோஜா கணவரை பிரிந்து தனது நல்லகான கொத்தப்பள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தை களுடன் சென்று வசித்து வந்துள்ளார்.

    நேற்று மதியம் ரஞ்சித் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்

    அப்போது மீண்டும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் சுத்தியலை எடுத்து மனைவி ேராஜாவின் தலையில் அடித்தார்.

    இதில் படுகாயமடைந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று ரஞ்சித் சரணடைந்தார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டிய வீட்டில் கிடந்த ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் கூறியதாவது, எனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை நான் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தேன் என்று கூறினார்.

    பின்னர் கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலைய மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர்.

    இதனால் அவ்வழியே செல்பவர்கள் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தும், நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளது.

    அப்பகுதியில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைக்காரர்கள், சினிமா தியேட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் அருகிலேயே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் காவேரிப்பட்டினம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    உடனடியாக இந்த பேனர்களை அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் விநாயகர் கோவில் மற்றும் வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை போலீசார் விநாயகர் கோவில் மற்றும் வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த தேன்கனிக்கோட்டை பிரசாந்த் தெருவை சேர்ந்த சந்துபாஷா (வயது 35), பை-பாஸ் சாலை பகுதியை சேர்ந்த பாரூக் பாஷா (48), ஆகிய 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பணம் ரூ7ஆயிரத்து 230யை பறிமுதல் செய்தனர்.

    • அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    • ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள தாசனபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மது என்கிற ஹேம்நாத் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து 5 நாட்கள், பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எருது விடும் விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • இரும்பு சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை கலந்த செறிவூட்டல் என்னும் சத்து அரிசியை தமிழக அரசு வழங்க உள்ளது.
    • செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்யப்பட்ட உணவை பொதுமக்கள் பார்வையிட்டு உண்டு மகிழ்ந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் தயாரிக்கப்பட்ட 10 வகையான உணவுகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மூலம் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்யப்பட்ட, எலுமிச்சை, சாம்பார், தேங்காய், கீரை, தக்காளி, மாங்காய், பருப்பு, தயிர் சாதங்களும், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட 10 வகையான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் கலந்த உப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

    வைட்டமின் நுண்ணூட்டச்சத்து நிறைந்த பொருட்களை ஏழை எளியோர் வாங்கி பயன்படுத்தாத நிலை உள்ளதால் சாதாரண அரிசியில் வைட்டமின்களான போலிக் அமிலம், இரும்பு சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை கலந்த செறிவூட்டல் என்னும் சத்து அரிசியை தமிழக அரசு வழங்க உள்ளது.

    செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்யப்பட்ட உணவை பொதுமக்கள் பார்வையிட்டு உண்டு மகிழ்ந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், திட்ட இயக்குனர் ஜாகீர்உசேன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரள், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் குமார், துணை மண்டல மேலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் 15 பேர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 30 பேர் உள்ளனர்.
    • கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரி படிப்பை முடித்த வர்களுடன் போட்டியிட்டு தேர்வை எழுதியுள்ளனர்.

    ஓசூர்,

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் 11 ஆண்டுகளாக தொடர்ந்து தற்காலிகமாக காலமுறை ஊதியத்தில் பணி யாற்றிவரும் 454 கால்நடை உதவி மருத்துவர்கள் ஏங்கிகிடக்கின்றனர்.

    இதில், ஓசூரில் 15 பேர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 30 பேர் உள்ளனர்.

    இவர்கள் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 2012-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் தற்காலிக கால்நடை உதவி மருத்துவ ர்களாக பணியில் சேர்ந்தவ ர்கள் ஆவர்.

    தொடர்ந்து 11 ஆண்டுகளாக கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள், உச்சநீதிமன்ற ஆணைக்குட்பட்டு கடந்த 15-ந்தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. போட்டித் தேர்வில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரி படிப்பை முடித்த வர்களுடன் போட்டியிட்டு தேர்வை எழுதியுள்ளனர்.

    இதில், 50 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்தாலும், 43 முதல் 55 வயதுள்ள இவர்கள், 24 வயதுடைய புதிதாக கல்லூரி படிப்பை முடித்தவர்களுடன் போட்டியிட்டு தர வரிசை யில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    கால்நடை மருந்தகத்தின் அன்றாட பணிகளுடன், திட்டப்பணிகளையும் மேற்கொண்டு போட்டித் தேர்வுக்கும் தயார் செய்து தரவரிசையில் வெல்வது என்பது, அவர்களின் வயது மற்றும் ஞாபகத்தில் வைத்து க்கொள்ளும் திறனாற்றலால் சாத்தியமற்றது என்று கருதுகின்றனர்.

    எனவே விடியலை நோக்கி காத்திருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் நீண்ட காலப்பணி, வயது மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களின் சமூக பொருளாதார நிலையை காக்க, தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்ற திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கை எண்: 153-ல் கூறியவாறு, கொள்கை முடிவெடுத்து பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் அளித்து 454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் குடும்பங்களில் ஒளியேற்றி விடியலை உண்டாக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர்.

    • கல்லுக்குறுக்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை சாலையில் மூங்கில்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் உடை கற்களை கடத்திவந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த கற்களை மாதேப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து அதிகாரி பொன்னுசாமி கொடுதுத புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல கல்லுக்குறுக்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. அது குறித்து அதிகாரி பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சிவக்குமார் (43), தர்மலிங்கம் (38), அருண்குமார் (28), பிரசாந்த் (28) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் ரூ.300 பறிமுதல் செய்தனர்.

    • கார் எதிர்பாரதவிதமாக மோதியதில் வள்ளியம்மா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பொம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ஈஸ்வரப்பா(60), இவரது மனைவி வள்ளியம்மா (வயது 46). இவரும் அவரது மகன் சிவலிங்கம் (29) ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலை குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாரதவிதமாக மோதியதில் வள்ளியம்மா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சிவலிங்கம் மற்றும் பர்கூர் மாதேப்பள்ளி வித்யா(15) ஆகியோர் லேசான காயங்களுடன் கிருஷ்ணகிரி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 48 கிலோ எடை கொண்ட திரவுபதி அம்மன் பூங்கரகத்தை சூடாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பூசாரி சுமந்து நடனம் ஆடினார்.
    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு களித்து மெய் சிலிர்த்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு திரவுபதி கரக உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி, அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல், 48 கிலோ எடை கொண்ட திரவுபதி அம்மன் பூங்கரகத்தை சூடாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பூசாரி சுமந்து நடனம் ஆடினார். தொடர்ந்து இடைவிடாது, காலை 10 மணி வரை பாகலூரின் முக்கிய வீதிகளிலும், சூடாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வீடுகள் முன்பும் வலம் வந்து கரகம் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த நிகழ்ச்சியை, பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு களித்து மெய் சிலிர்த்தனர்.

    • வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர் பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வனஉயிரின சரணாயலம் அஞ்செட்டி வனச்சரகம் காவிரி கரையோரம் அமைந்துள்ள பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில் அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று வரும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வனத்துறை வாகன ங்களில் அழைத்து வரப்பட்டனர்.

    முகாமில் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வகையான வன உயிரினங்களின் வகைகள், அவைகளினால் ஏற்படும் பயன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

    மேலும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் சிறப்பு, அங்கு வாழ்ந்து வரும் வன உயிரினங்கள் மற்றும் அவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் விவரித்தார்.

    பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர் பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

    அன்புக்கரங்கள் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டிகள், யோகா பயிற்சி, ஓரிகாமி மூலம் தாள்களில் பொம்மைகள் செய்தும் வனங்களை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் தென்னிந்தியாவில் வாழும் பறவைகளை இனங்கண்டறிதல் தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டு விளக்கப்பட்டது. அத்துடன் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பேனா, பென்சில், கலர் பென்சில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட சுமார் 100 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு பின்னர் வனத்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அவர்களது பகுதிக்கு அழைத்துச்சென்று விடப்பட்டனர்.

    • கிருஷ்ணகிரி சாலையில் பாகீமானூர் பகுதியில் நேற்று வாகன சோதனையில ஈடுபட்டனர்.
    • 5 கற்களை மத்தூரில் இருந்து ஜெகதேவிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் அதிகாரிகள் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் பாகீமானூர் பகுதியில் நேற்று வாகன சோதனையில ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் நின்ற கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியை சோதனை செய்த போது அதில் 10-கன மீட்டர் கொண்ட 5 கற்களை மத்தூரில் இருந்து ஜெகதேவிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    இது குறித்து அதிகாரி பொன்னுமனி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு
    • அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு மற்றும் கிரகோரி பொன்னுசாமி திருவண்ணாமலை சாலை மற்றும் கிருஷ்ணகிரி முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×