என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்கூட்டர் மீது கார் மோதி பெண் பலி
- கார் எதிர்பாரதவிதமாக மோதியதில் வள்ளியம்மா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பொம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ஈஸ்வரப்பா(60), இவரது மனைவி வள்ளியம்மா (வயது 46). இவரும் அவரது மகன் சிவலிங்கம் (29) ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலை குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாரதவிதமாக மோதியதில் வள்ளியம்மா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் சிவலிங்கம் மற்றும் பர்கூர் மாதேப்பள்ளி வித்யா(15) ஆகியோர் லேசான காயங்களுடன் கிருஷ்ணகிரி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






