என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை பராமரிப்புத்துறையில் தற்காலிகமாக பணியாற்றிவரும் 454 உதவி மருத்துவர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
- ஓசூரில் 15 பேர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 30 பேர் உள்ளனர்.
- கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரி படிப்பை முடித்த வர்களுடன் போட்டியிட்டு தேர்வை எழுதியுள்ளனர்.
ஓசூர்,
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் 11 ஆண்டுகளாக தொடர்ந்து தற்காலிகமாக காலமுறை ஊதியத்தில் பணி யாற்றிவரும் 454 கால்நடை உதவி மருத்துவர்கள் ஏங்கிகிடக்கின்றனர்.
இதில், ஓசூரில் 15 பேர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 30 பேர் உள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 2012-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் தற்காலிக கால்நடை உதவி மருத்துவ ர்களாக பணியில் சேர்ந்தவ ர்கள் ஆவர்.
தொடர்ந்து 11 ஆண்டுகளாக கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள், உச்சநீதிமன்ற ஆணைக்குட்பட்டு கடந்த 15-ந்தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. போட்டித் தேர்வில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரி படிப்பை முடித்த வர்களுடன் போட்டியிட்டு தேர்வை எழுதியுள்ளனர்.
இதில், 50 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்தாலும், 43 முதல் 55 வயதுள்ள இவர்கள், 24 வயதுடைய புதிதாக கல்லூரி படிப்பை முடித்தவர்களுடன் போட்டியிட்டு தர வரிசை யில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கால்நடை மருந்தகத்தின் அன்றாட பணிகளுடன், திட்டப்பணிகளையும் மேற்கொண்டு போட்டித் தேர்வுக்கும் தயார் செய்து தரவரிசையில் வெல்வது என்பது, அவர்களின் வயது மற்றும் ஞாபகத்தில் வைத்து க்கொள்ளும் திறனாற்றலால் சாத்தியமற்றது என்று கருதுகின்றனர்.
எனவே விடியலை நோக்கி காத்திருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் நீண்ட காலப்பணி, வயது மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களின் சமூக பொருளாதார நிலையை காக்க, தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்ற திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கை எண்: 153-ல் கூறியவாறு, கொள்கை முடிவெடுத்து பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் அளித்து 454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் குடும்பங்களில் ஒளியேற்றி விடியலை உண்டாக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர்.






