என் மலர்
கிருஷ்ணகிரி
- துத்துக்குடியில் நடந்த கிராம அலுவலர் கொலையை கண்டித்து சூளகிரி வருவாய் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- துணைத் தலைவர் ரவி, வட்டச் செயலாளர் அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு துத்துக்குடியில் நடந்த கிராம அலுவலர் கொலையை கண்டித்து சூளகிரி வருவாய் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் லட்சுமணன் , வட்டத் துணைத் தலைவர் ரவி, வட்டச் செயலாளர் அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 5 வகுப்பு படித்து முடித்து மேல் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.
- 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை கலந்து கொண்ட
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தேவசானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சூளகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
ஆசிரியர்கள் ராஜசேகர், ஜெசன்நாதன் மற்றும் தலைமை உதவி ஆசிரியர் உமா மஹேஸ்வரி, சுபாஷினி, ஜெயந்தி, ஜான்சிராணி, முனிராஜ், சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 5 வகுப்பு படித்து முடித்து மேல் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.
கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தபடும் நிலையில் 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை கலந்து கொண்ட பெற்றோர்கள் பாராட்டினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா செய்திருந்தார்.
- ரூ.1 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- மாணவ, மாணவிகள் உயர்கல்வியை முடித்து பல்வேறு போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகாவில் 5 புதிய ரேஷன் கடைகளும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறை கட்டிடங்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.36 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் அறுவை அரங்கு, எக்ஸ்ரே மையம், சி.டி. ஸ்கேன் மையம் ஆகியவை திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு புதிய ரேஷன் கடைகள், வகுப்பறை கட்டிடங்கள், அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும் ரூ.50 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டறியும் உபகரணங்கள் பொறுத்தப்பட்ட நடமாடும் ஊர்தி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி கிளையின் புதிய கிளையை அமைச்சர் திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தன்னிறைவு திட்டம் 2019 - 2020 -ன் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் மூலம் ரூ.50 லட்சம் பங்களிப்பாகவும், ரூ.50 லட்சம் அரசு நிதி என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்லூரியில் உயர்கல்வித் துறை சார்பாக ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்பில் 9 அறிவியல் ஆய்வக கட்டிடங்களுக்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, மாணவ, மாணவிகள் உயர்கல்வியை முடித்து பல்வேறு போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, ரூ.36 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் அறுவை அரங்கும், எக்ஸ்ரே மையமும், கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் இயங்கி வந்த சிடி ஸ்கேன் மையம் நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை வழங்கும் பொருட்டு தற்போது புதியதாக துவக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.50 லட்சம் மதிப்பில் அதிநவீன காசநோய் கண்டறியும் உபகரணங்கள் பொறுத்தப்பட்ட நடமாடும் ஊர்த்தி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், துணைப்பதிவாளர் குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இந்தியன் வங்கி மண்டல பொதுமேலாளர் பழனிகுமார், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- லாட்டரி சீட்டு விற்றதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.3500 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசார் பாஞ்சாலியூர், கிருஷ்ணகிரி டோல்கேட், வேப்பனப்பள்ளி கோவிந்த அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுதந்திரம் (எ) பொன்வண்டு (38), திருப்பத்தூர் மாவட்டம் சி.கே ஆச்சிராமம் பகுதியை சேர்ந்த திலீப் (எ) தனசேகரன், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுற்று கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (26), ஓசூர் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்த கனசேயம் மண்டால் (40) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 264 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தருமபுரி ெரயில்வே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்த ராஜி, போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், கிருஷ்ணகிரி டவுன் பாரதியார் நகரை சேர்ந்த சீனிவாசன், ஓசூர் அட்கோ பகுதியை சேர்ந்த ராமசாமி, மகாதேவன், தேன்கனிக்கட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சலீம், ராயக்கோட்டை ரஹ்மான் காலனி சேர்ந்த முருகன், கெலமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 264 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ஆபாசமாக பேசிய கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (வயது 39). ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
- சம்பவத்தன்று மன விரக்தியில் இருந்த உமா விஷம் குடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொ ட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ்.
இவரது மனைவி உமா (வயது 30). இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருட ங்கள் ஆனநிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உமா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று மன விரக்தியில் இருந்த உமா விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் போதையில் தவறி விழுந்தார்.
- நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் டேனியல் (வயது30). கூலித்தொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு போதையில் வீடடிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் போதையில் தவறி விழுந்தார்.
இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கிணற்றில் டேனியலின் உடல் மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே அங்கு விரைந்த டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.
- கோபித்து வீட்டை வெளியே சென்றவர், பீன்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் மோனி (வயது 22). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் பின்னர் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால பதறிபோன தந்தை ஜெயசீலன் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தந்தை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோனிைய தேடிவருகின்றனர்.
மற்ெறாரு சம்பவம்
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கலுகொண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி ரேவதி (வயது24). கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து வீட்டை ெவளியே சென்றவர், பீன்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ஹரீஷ் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன பெண் ஊழியர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாதனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் மாதேஸ்வரி (வயது 27). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி கார்னூர் பகுதியில் ஹாஸ்டலில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக ஹாஸ்டலில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறிப்போன அவர் பலஇடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாதேஸ்வரி மாயமானது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சின்னசாமி மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாதேஸ்வரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரியில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு மைய முகாமில், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை வாயிற்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், தலைமையிட செயலாளர் திம்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் நாராயணன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2009 ஜூன் 1-ந் தேதி முதல் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பினை சரி செய்திட உரிய ஆணை வழங்கிட வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.
எதிர்கால சமுதாயத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களின் பணிப் பாதுப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து நலத்திட்டங்களும், சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரியில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஆசிரியர் மாணவர் நலன் கருதி கற்பித்தல் கற்றல் பணியை மட்டுமே ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
மத்திய அரசு வழங்கியதுபோல் அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். 2019 முதல் நிறுத்த வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். நீட் மற்றும் சியூடிஇ தேர்வை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது
- போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கரடிகுட்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மேஸ்திரி.
இவர் பாலேபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடப்பா என்பவரிடம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றார். இதில் மாரிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதில் ரூ.10 ஆயிரத்தை வெங்கடப்பாவிடம் திருப்பி செலுத்தினார்.
மீதி உள்ள பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து வெங்கடப்பாவின் மகன் முருகேசன், மாரிமுத்துவை நேரில் சந்தித்து பணத்தை திருப்பி கொடு என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரடைந்த முருகேசன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மாரிமுத்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
- எதிரே வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- தூக்கி வீசப்பட்ட கங்கய்யாகுரிகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர் கங்கய்யாகுரிகர் (வயது38). இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கங்கய்யாகுரிகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அட்கோ போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து கங்கய்யாகுரிகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






