என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒவ்வொரு பயிர் விதைக்கும் விதையில் அதிகபட்ச குறிப்பிட்ட ஈரப்பதம் மட்டுமே இருக்கலாம்.
- உதாரணத்திற்கு நெல்லுக்கு 13 சதவீதம், சிறுதானியத்திற்கு 12 சதவீதம், பருப்பு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.
கிருஷ்ணகிரி,
விதை சேமிப்பில் விதை ஈரப்பதத்தின் பங்கு குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்பதற்கேற்ப தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்கள் பயிர் விளைச்சலுக்கு தேவையான தொழில் நுட்பங்களை நல்ல முறையில் கடைபிடிக்க வேண்டும்.
தரமான விதை என்பது சான்று பெற்ற விதைகளாகும். அதாவது அவை குறிப்பிட்ட தர நிர்ணயித்திற்குள் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் பிற ரத கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும்.
உற்பத்தி செய்த விதைக்கு விதைச்சான்று பெறுதவற்கும், விதையை சேமிப்பதற்கும் ஈரப்பதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பயிர் விதைக்கும் விதையில் அதிகபட்ச குறிப்பிட்ட ஈரப்பதம் மட்டுமே இருக்கலாம்.
உதாரணத்திற்கு நெல்லுக்கு 13 சதவீதம், சிறுதானியத்திற்கு 12 சதவீதம், பருப்பு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் மட்டுமே இருக்கலாம். இவ்வாறு அதிகபட்ச ஈரப்பதம் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும்.
சேமிக்கும் விதையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்திற்கு மேல் இருந்தால் விதை சேமிப்பின் போது பூச்சிநோய் தாக்குதல் ஏற்படும்.
விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டால் அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் விதையின் முளைப்புத்திறனை பாதுகாக்க விதையின் ஈரத்தன்மை அறிந்து, விதைகளை தேவையான ஈரத்தன்மைக்கு கொண்டு வந்து சேமித்தால் விதைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடிகிறது. இத்தரத்தை நிர்ணயப்பதில் விதைப் பரிசோதனை நியைம் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதம் அறிந்து கொள்ள விதைக்குவியலில் இருந்து 100 கிராம் விதை மாதிரி எடுத்து, காற்றுபுகாத பாலித்தீன் பைகளில் அடைத்து பயிர், இரகம், குவியல் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு அனுப்ப வேண்டும். முளைப்புத் திறன் மற்றும் புறத்தூய்மை ஆகிய விதைத்தரங்களையும் அறிந்துகொள்ள வேண்டியிருப்பின், தேவையான அளவு விதை மாதிரி எடுத்து ஈரப்பதம் அறிய வேண்டிய விதை மாதிரியுடன் இன்னொரு பையிலிட்டு பயிர், ரகம், குவியல் எண் ஆகியவை குறிப்பட்டு அனுப்ப வேண்டும்.
முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை ஆகிய விதைத்தரங்களையம் அறிந்துகொள்ள வேண்டிருப்பின் தேவையான அளவு விதை மாதிரி எடுத்து, ஈரப்பதம் அறிய வேண்டிய விதை மாதிரியுடன் இன்னொரு பையிலிட்டு, பயிர் இரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, முகப்புக் கடிதத்துடன் ஒரு மாதிக்கு ரூ.80 வீதம் கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்தால், விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
மேலும், விதை மாதிரியை, வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நாளந்தா கல்விக் குழுமத்தின் 30-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவின் முதல் நாளில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், நடிகர் பரத், இயற்கை விவசாயிகள் பாண்டிச்சேரி கிருஷ்ணா மெக்கன்சி, நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளியின் இலச்சினையை வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர்.
இரண்டாம் நாளில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி, ஐ.ஆர்.ஏ.எஸ் பிரேமா, ஈரோடு மகேஷ், மிர்ச்சி விஜய் ஆகியோர் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர் அமைப்பினை தொடங்கி வைத்து, முத்து விழாச் சிறப்பிதழை வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர். இரண்டு நாட்களும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
நடந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், தாளாளர்
சாமுண்டீஸ்வரி, பள்ளியின் இயக்குநர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பிற பணியாளர்கள் செய்திருந்தனர்.
- கடந்த 24-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஜங்கப்பன் நகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்தாஸ். ஆம்புலன்ஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி தமிழ்செல்வி (வயது34) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன நிர்மல்தாஸ் அவரை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் தமிழ்செல்வி கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து நிர்மல்தாஸ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மாலை நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதுகுறித்து தந்தை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே அரத்தக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சவுமியா (வயது23). இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிரவில்லை. இதுகுறித்து பெண்ணின் தந்தை ராஜா அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
- குடி–போதையில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ராஜகோபால் திடீரென்று அருகில் இருந்து கல்லை எடுத்து ஸ்ரீகாந்தை சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சிகரமனபள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது24). கூலித்தொழிலாளி. அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (22). இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாந்த், ராஜகோபால் இருவரும் இணைந்து மது குடித்தனர்.
அப்போது குடி–போதையில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் திடீரென்று அருகில் இருந்து கல்லை எடுத்து ஸ்ரீகாந்தை சரமாரியாக தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிர அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் வேப்பனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- பில்லனகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது
- விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார்.
குருபர ப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு வந்தவர்களை ஊராட்சி மன்ற துணை தலைவர் கோகிலா சிவசுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் குத்து விளக்கேற்றினார். இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, பத்ரிநாத், ஒன்றிய பொறியாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் திம்மராஜ், வார்டு உறுப்பினர்கள் மகேஷ்ராவ், முனியப்பன், முனவர், பிரேமாபாய், பேபி, சுரேஷ்குமார், விஜயா, சத்யா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 15 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.
- உலகத்திறனாய்வு தடகள போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 2-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 15 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் மற்றும் உலகத்திறனாய்வு தடகள போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், டேக்வோண்டோ, ஹேண்ட்பால் மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் பயிற்சி முகாம் நடைபெறும். மேற்கண்ட விளையாட்டுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே, பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகிற மே மாதம் 2ம் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆஜராகி பயிற்சி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) உள்பட 11 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கந்திகுப்பம் அருகே உள்ள உரக்கம், மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (34), நாகன பள்ளியை சேர்ந்த சகாதேவன் (44), பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சபரி (26), விக்கி (26,) ஓசூர் அருகே உள்ள பந்தலபள்ளியை சேர்ந்த வினோத் குமார் (41), குந்தாரப்பள்ளியை சேர்ந்த இமை (30)வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரிஜித்ரன் (21), சூளகிரி அருகே உள்ள பேடாரப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் (27), நகர பள்ளியை சேர்ந்த குலசேகரன் (28), ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விக்னேஷ் (27), கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
- நிலத்தில் விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல் என கூறப்படுகிறது.
- இந்நிகழ்வில் ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தி உழவுத் தொழிலை தொடங்கியுள்ளனர்.
மத்தூர்,
தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ, சித்திரை மாதத்தில் முதல் மழை பெய்யும் போது மாடுகளைத் தயார் செய்து ஊர்ப்பொது வயலில், நிலத்தில் விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல் என கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி கிராமத்தில் நேற்று சூரிய பகவானுக்கும் உழவுப் பணிகளை மேற்கொள்ளும் மாட்டுக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மரத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை, மாட்டுத் தோளால் செய்யப்பட்ட வடக்கயிறு மற்றும் நாட்டு மாடுகளை கொண்டு சூரிய பகவானுக்கும் மாட்டுக்கும் பூஜைகள் செய்தனர்.
இதனையடுத்து பொன்னேர் பூட்டி ஊரின் பொது பெயரில் பாரம்பரிய வழக்கப்படி சூரிய பகவானுக்கு வழிபாடு செய்த பின்பு விவசாயிகள் அவரவர் நிலங்களில் உழவு தொழிலை தொடங்கினர்.
இந்நிகழ்வில் ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தி உழவுத் தொழிலை தொடங்கியுள்ளனர்.
மேலும் பொன்னேர் உழுதல் நிகழ்விற்கு படைக்க ப்பட்ட அரிசி தேங்காய் வெள்ளம் ஆகியவற்றை கலந்து அனைவருக்கும் பிர சாதமாக வழங்கப்பட்டது.
- தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள மீன் கடைகள் அருகே லாரிகளை நிறுத்தி விடுகின்றனர்.
- அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிருஷ்ணகிரி- தருமபுரி தேசிய நெடுஞ்சாலை திம்மாபுரம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக த்தான் திம்மாபுரம், மணிநகர், சுப்பிரமணியபுரம் மற்றும் காவேரிப்பட்டணம் நகருக்கு செல்ல முடியும்.
ஆனால் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள மீன் கடைகள் அருகே லாரிகளை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நிறுத்தப்பட்ட லாரிகள் மீண்டும் புறப்படும் போது வேகமாக திருப்புவதால் பிரிவு சாலைக்கு செல்ல முயலும் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகுவது சம்பவம் அதிகரித்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் நிரந்தரமாக பேரிகார்டு வைக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தவாறு நிறுத்தும் லாரிகளை சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். இதை ரோந்து காவல்துறை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்திபெற்ற சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை வரும் மே மாதம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, கோவில் தர்மகர்த்தாவும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மன் மற்றும் கொடிகம்பத்தை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில் எதிரே கொடி கம்பம் நடப்பட்டு ஆடுகளை பலியிட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந்தேதி வரை, பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.
கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகளில், மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மல்லிகா தேவராஜ், ஓசூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் நடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரஸ்வதி நடராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் முனிராஜ், தி.மு.க.நிர்வாகி மஞ்சுநாத் மற்றும் கோவில் பரம்பரை பூசாரி ஸ்ரீதர் என்ற துரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருேக உள்ள அத்தக்கல்லை சேர்ந்தவர் சிவனாங்கி (வயது30). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சிவனாங்கியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.
- காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
- அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 3-ம் ஆண்டு எருதுவிடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதையடுத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இலக்கை விரைவாக கடந்த காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன.
இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






