என் மலர்
கிருஷ்ணகிரி
- மருத்துவமனையில் கை கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
- குடிநீர் தொட்டியில் இருந்து நீண்ட நேரமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கால்வாயில் சென்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 17,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு குடிநீர் தினந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால், ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனையிலும் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் பொதுமக்கள் ஆகியோர் கடைகளில் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலை இருந்து வருகிறது. இது தவிர மருத்துவமனையில் கை கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து நீண்ட நேரமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கால்வாயில் சென்றது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் குடிநீர் தொட்டியில், இவ்வாறு குடிநீர் வீணாகி சென்றது, நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.
- கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- கடந்த சில நாட்களாக குடும்பத்தில் சகோதரர்களிடையே இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தன் (வயது 41). கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனவேதனையில் இருந்த அனுமந்தன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சூளகிரி அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனி வேங்கடப்பா (வயது 68).
கடந்த சில நாட்களாக குடும்பத்தில் அண்ணன் தம்பி இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த முனிவெங்கடப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விவசாயியான இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை மிட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தோழான் (வயது75).
விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவர் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- குட்டையில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாலாஜி (வயது 32). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வழியில் கை கால் கழுவதற்காக அங்குள்ள குட்டையில் இறங்கி உள்ளார். அப்போது நிலை தடுமாறி தண்ணீர் உள்ளே விழுந்ததில் குட்டையில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- ஸ்டவ்வில் தண்ணீரை சூடேற்றும் போது துணியில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார்.
- சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம் பள்ளி அருகே உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 42). இவரது மகள் பிருந்தா (17). சம்பவத்தன்று இவர் ஸ்டவ்வில் தண்ணீரை சூடேற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் துணியில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார்.
உடனே இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிருந்தா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.ஆர் .பி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
- மரத்தில் ஏறி தலைகள் வெட்டும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி அருகே உள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவியம்மா (வயது 57). இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆட்டுக்காக மரத்தில் ஏறி தலைகள் வெட்டும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது செல்லும் வழியிலேயே லட்சுமி தேவியம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர்.
- தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கொண்டப்ப நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 லாரிகள் நின்றன. அதை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இத்திட்டத்தில் பயன்பெறும் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் (கிராமங்கள்) மற்றும் ரூ.96 ஆயிரம் (நகரங்கள்) என்பதற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணத்தால் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் மிஷன் வட்சாலயா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 18 வயது வரை உள்ளவர்களின் வளர்ச்சி, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவிடும் வகையில் நிதி ஆதரவு தொகை மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2023-24 ம் நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் வருகிற மே மாதம் 15-ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறும் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் (கிராமங்கள்) மற்றும் ரூ.96 ஆயிரம் (நகரங்கள்) என்பதற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும், பெற்றோரில் இருவரை இழந்தை குழந்தைகள், தந்தையை இழந்த குழந்தைகள் உயிர் அச்சுறுத்தல் நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், உடல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள், எச்ஐவி, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணத்தால் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு முகவரியிட்டு, கைப்பட எழுதிய விண்ணப்பத்துடன், குழந்தையின் புகைப்படம், படிப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை, இறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களை பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 8,10, டிஆர்டிஏ வணிக வளாகம், மாவட்ட மைய நூலகம் எதிரில், கிருஷ்ணகிரி 635 002 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளாலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எந்தவித பலன்அளிக்காததால் விரக்தியில் முனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக 3 பெண்கள் உள்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சாவித்ரி (வயது45). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது. இதனால் மனவிரக்தியில் இருந்த சாவித்ரி கடந்த நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் வீரபத்திரன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த பூனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு முனியம்மாள் (30) என்ற மகள் உள்ளனர். இந்த நிலையில் முனியம்மாளுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் எந்தவித பலன்அளிக்காததால் விரக்தியில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொன்னியம்மாள் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் வெண்ணப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (43). இவர் குடும்பத்தகராறு காரணமாக மனவிரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பங்களா தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (30). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பத்தலப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி அர்ச்சனா (28). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று ஊத்தங்கரை அடுத்த மயிலாடும்பாளற பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (45). கூலித்தொழிலாளியான இவர் வயிற்று வலியால் கடும் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்தவித பலனும் அளிக்காததால், விரக்தியில் இருந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து கீேழ மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகலூர் போலீசாரின் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
- மின்வாரிய ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகேயுள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கனவே ஏராளமான உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி குண்டப்பா என்பவரின் விவசாய நிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று பாகலூர் போலீசாரின் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயி குண்டப்பா மற்றும் குடும்பத்தினர் நேற்று உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வந்த மின்வாரிய ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களிடம் மின்வாரியத்துறையினர் எந்த அனுமதியையும் பெறாமல், விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வது தவறான செயல் என வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் முறையிட்டனர்.
அதற்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் பதிலளிக்கையில், விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது என குண்டப்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மின்வாரியத்துறை மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என அந்த குடும்பத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு மற்றும் பயிர் சேத இழப்பீடு ஆகியவை குண்டப்பா குடும்பத்தினருக்கு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது. உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியையொட்டி, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
- ரூ.22 கோடியே 79 லட்சம் மதிப்பிலான கட்டிடப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் காந்தி தொங்கி வைத்தார்.
- 242 பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சிகளில் பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பாத்த கோட்டாவில், தேன்கனிக்கோட்டை முதல் உத்தனப்பள்ளி வரை ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தி வலு ப்படுத்தும் பணிகளுக்கும், பாத்தகோட்டா முதல் டி. குருபரபள்ளி வரை ரூ. 2 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணிகளுக்கும் என மொத்தம் ரூ.22 கோடியே 79 லட்சம் மதிப்பிலான கட்டிடப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொங்கி வைத்தும், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர், கிருஷ்ணா நகர், டைட்டான் டவுன்சிப் மற்றும் ஓ.காரப்பள்ளி கொத்தகொண்டபள்ளி ஆகிய 5 பகுதியில் பகுதி நேர மற்றும் முழுநேர ரேஷன் கடைகளையும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.
மேலும் 55 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 207 பயனாளிகளுக்கு இருளர் இன சாதி சான்றிதழ்கள் என மொத்தம் 242 பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சிகளில் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி எம்.பி.டாக்டர் செல்லகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், தளி டி.ராமச்சந்திரன் மற்றும் ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, சப்- கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, துணை மேயர் ஆனந்தய்யா, மாநில தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்
- மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளியில் ரூ.14.74 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கட்டுமான பணிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது:-
நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், மலை வாழ்பகுதி மாணவ, மாணவிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில், தளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிக அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தை, கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி, சென்னை தலைமை செய லகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இக்கல்லூரியில் தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு, தற்போது தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் ரூ.14.74 கோடியில் கட்டுமான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரி 4809.29 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், செல்லகுமார் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, தருமபுரி மண்டல உயர்கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, தளி அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாறன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன் னாள் எம்எல்ஏ முருகன், தாசில்தார் சரவணமூர்த்தி, பிடிஓக்கள் கோபாலகிருஷ்ணன், விமல்ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






