துணியில் தீ பிடித்து மாணவி சாவு

ஸ்டவ்வில் தண்ணீரை சூடேற்றும் போது துணியில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார்.சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
துணியில் தீ பிடித்து மாணவி சாவு
Published on

 கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம் பள்ளி அருகே உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 42). இவரது மகள் பிருந்தா (17). சம்பவத்தன்று இவர் ஸ்டவ்வில் தண்ணீரை சூடேற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் துணியில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார்.

உடனே இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிருந்தா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.ஆர் .பி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com