என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லனகுப்பம்  ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு
    X

    பில்லனகுப்பம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

    • பில்லனகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது
    • விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார்.

    குருபர ப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வந்தவர்களை ஊராட்சி மன்ற துணை தலைவர் கோகிலா சிவசுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்த விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் குத்து விளக்கேற்றினார். இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, பத்ரிநாத், ஒன்றிய பொறியாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் திம்மராஜ், வார்டு உறுப்பினர்கள் மகேஷ்ராவ், முனியப்பன், முனவர், பிரேமாபாய், பேபி, சுரேஷ்குமார், விஜயா, சத்யா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×