

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருேக உள்ள அத்தக்கல்லை சேர்ந்தவர் சிவனாங்கி (வயது30). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சிவனாங்கியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.