என் மலர்
நீங்கள் தேடியது "உழுதல் நிகழ்வு"
- நிலத்தில் விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல் என கூறப்படுகிறது.
- இந்நிகழ்வில் ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தி உழவுத் தொழிலை தொடங்கியுள்ளனர்.
மத்தூர்,
தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ, சித்திரை மாதத்தில் முதல் மழை பெய்யும் போது மாடுகளைத் தயார் செய்து ஊர்ப்பொது வயலில், நிலத்தில் விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல் என கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி கிராமத்தில் நேற்று சூரிய பகவானுக்கும் உழவுப் பணிகளை மேற்கொள்ளும் மாட்டுக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மரத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை, மாட்டுத் தோளால் செய்யப்பட்ட வடக்கயிறு மற்றும் நாட்டு மாடுகளை கொண்டு சூரிய பகவானுக்கும் மாட்டுக்கும் பூஜைகள் செய்தனர்.
இதனையடுத்து பொன்னேர் பூட்டி ஊரின் பொது பெயரில் பாரம்பரிய வழக்கப்படி சூரிய பகவானுக்கு வழிபாடு செய்த பின்பு விவசாயிகள் அவரவர் நிலங்களில் உழவு தொழிலை தொடங்கினர்.
இந்நிகழ்வில் ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தி உழவுத் தொழிலை தொடங்கியுள்ளனர்.
மேலும் பொன்னேர் உழுதல் நிகழ்விற்கு படைக்க ப்பட்ட அரிசி தேங்காய் வெள்ளம் ஆகியவற்றை கலந்து அனைவருக்கும் பிர சாதமாக வழங்கப்பட்டது.






