என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாரியம்மன் கோவிலில் அம்மனை தோளில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்த காட்சி.
கோட்டை மாரியம்மன் கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி
- ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்திபெற்ற சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை வரும் மே மாதம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, கோவில் தர்மகர்த்தாவும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மன் மற்றும் கொடிகம்பத்தை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில் எதிரே கொடி கம்பம் நடப்பட்டு ஆடுகளை பலியிட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந்தேதி வரை, பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.
கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகளில், மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மல்லிகா தேவராஜ், ஓசூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் நடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரஸ்வதி நடராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் முனிராஜ், தி.மு.க.நிர்வாகி மஞ்சுநாத் மற்றும் கோவில் பரம்பரை பூசாரி ஸ்ரீதர் என்ற துரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






