என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மேஸ்திரியை தாக்கிய வாலிபர் கைது
    X

    மேஸ்திரியை தாக்கிய வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கரடிகுட்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மேஸ்திரி.

    இவர் பாலேபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடப்பா என்பவரிடம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றார். இதில் மாரிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதில் ரூ.10 ஆயிரத்தை வெங்கடப்பாவிடம் திருப்பி செலுத்தினார்.

    மீதி உள்ள பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து வெங்கடப்பாவின் மகன் முருகேசன், மாரிமுத்துவை நேரில் சந்தித்து பணத்தை திருப்பி கொடு என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரடைந்த முருகேசன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து மாரிமுத்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×