என் மலர்
கிருஷ்ணகிரி
- அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலைபட்டியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் அரவிந்த்குமார் (வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் வீரராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அரவிந்த்குமார் ஒருமாத விடுமுறை எடுத்து நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தொகரப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம்குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணுவத்தில் இருந்து சில மாதங்கள் கழித்து ஒரு மாத விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக வந்த ராணுவ வீரர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
- அமோக வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.
- மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
ஓசூர்,
கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரல் கட்சி அமோக வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கவுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலைக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
மேலும் இதில், மாநகர தலைவர் தியாகராஜன், சிவப்பா ரெட்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, ஓ.பி.சி. பிரிவு நிர்வாகி குமார், கீர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஏராளமானோர் வாழ்த்து கோஷங்களை எழுப்பி, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
- பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த வெற்றியை கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர். அதன்படி, கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, பழையபேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் லலித்ஆண்டனி முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் ஹரி ஆகியோர் பங்கேற்று, இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், எஸ்சி, எஸ்டி துறை மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி, முன்னாள் நகரத் தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ்அர்னால்டு உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து கோஷங்களை எழுப்பி, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
இதே போல் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் நடந்த கொண்டாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்புரையாற்றினார்.
ஓ.பி.சி மாவட்ட தலைவர் ஆஜித்பாஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துறை தலைவர் ஷபீக்அகமத், குட்டி(எ)விஜயராஜ், இர்பான், மனித உரிமைத்துறை மாவட்ட தவைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மரிநல பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அர்ஜூனன் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த ஜிஞ்சம்பட்டி அருகே சரவண கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது60). இவர் இன்று காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து பர்கூர்-மத்தூர் சாலையில் உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.
அப்போது பால்வாங்கி விட்டு அங்குள்ள மின்வாரிய துறை அலுவலகம் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அர்ஜூனன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர்.
- அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை கிராம பகுதியில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். பின்னர் தப்பியோடிய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தடத்தாரை கிராமத்தைச் சேர்ந்த பேட்டப்பா மகன் ராகுல் 22 என்ற இளைஞரை கைது செய்து காஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- ராணுவ வீரர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
- மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலைபட்டியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் அரவிந்த்குமார் (வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் வீரராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அரவிந்த்குமார் ஒருமாத விடுமுறை எடுத்து நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தொகரப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம்குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணுவத்தில் இருந்து சில மாதங்கள் கழித்து ஒரு மாத விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக வந்த ராணுவ வீரர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
- சிங்கிரிப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள், நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசியை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களிலும், டாடா சுமோ கார் மற்றும் அந்த காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது24) என்பவரையும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மூங்கில்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- கடந்த சில மாதங்களாக விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் பாலியல் ரீதியாத பல தொந்தரவு அளித்து வருவதாகவும் கணவரிடம் கூறியுள்ளார்.
- தற்போது வரை பூட்டிய வீட்டின் முன்பு விக்னேஸ்வரி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது28). இவரது கணவர் திருப்பதி (32) . இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் நிதர்ஷனா என்ற மகள் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் பாலியல் ரீதியாத பல தொந்தரவு அளித்து வருவதாகவும், இதுகுறித்து அவர் கணவரிடம் கூறியபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று மாலை விக்ணேஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றி கணவர் திருப்பதி பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், ஊர் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், வீட்டின் முன்பு தனது மகள் நிதர்ஷனாவுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து தற்போது வரை பூட்டிய வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
மாமனார், மாமியார் மற்றும் கணவர் 3 பேரையும் வீட்டை பூட்டி விட்டு அவர்களது நிலத்தில் உள்ள கொட்டகையில் குடியிருந்து வரும் நிலையில், தனது உரிமைக்காக பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தைகளுடன் போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காணப்பட்ட பிரபாகரன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரதிநகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் பிரபாகரன் (26). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காணப்பட்ட பிரபாகரன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எஸ்.குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (75). கூலித்தொ ழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு ஒரு விபத்தில் அடிப்பட்டு சரியான சிகிச்சை பெறமுடியாமல் நோய்வாய்ப்பட்டு கிடந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டை மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஓசூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 660 மாணவ, மாணவிகளை, அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்.
- மாணவர்கள் விளையாட்டு, கலை மற்றும் கைவினை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது. இந்த கோடைகால தொடக்க முகாமில் குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம் மற்றும் மாதிரி அகழ்வாராய்ச்சி, தொழில்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு மற்றும் பல வகையான செயல்பாடுகள் வழங்கப்படும்.
இந்த முகாமில் 8 மற்றும் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சில தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி இன்று (சனிக்கிழமை) கல்லுகுறிக்கியில் பாறை ஓவியங்கள் காணவும், நாளை (திங்கட்கிழமை) மலர்கள் சாகுபடி குறித்து அறிந்து கொள்ள, தளியில் கொய்மலர்கள் ஆராய்ச்சி மையத்திற்கும், 17-ந் தேதி ஓசூரில் உள்ள டைட்டான், அசோக் லே லேண்ட் நிறுவனங்களுக்கும், 18&ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 19-ந் தேதி பெங்களூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கும், குப்பத்தில் உள்ள அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனுக்கு மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மேலும், வருகிற 22-ந் தேதி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திகிரி கால்நடை பண்ணைக்கும், 24-ந் தேதி அய்யூர் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு மாணவர்கள் செல்கின்றனர். வருகிற 25-ந் தேதி கலெக்டருடன் நடைபெறும் தேநீர் விருந்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த கோடைக்கால சிறப்பு முகாமில் பங்கேற்கும் 660 மாணவ, மாணவிகளை, அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில், மாணவர்கள் விளையாட்டு, கலை மற்றும் கைவினை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான தலைப்புகளை மையமாகக் கொண்ட கல்வி பட்டறைகளிலும் பங்கேற்க முடியும். இது, மாணவர்களுக்கு நேர்மறையான மற்றும் ஈர்க்கக்கூடிய கற்றல் அனுபவம் கிடைக்கும், திறன்கள் மேம்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2 மாதத்தில் இந்த 2 யானைகள் 6 பேரை கொன்றுள்ளன.
- இரு மாநில வனத்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை கண்கா ணித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 ஆண் யானைகள் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி நகரையொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டது. தொடர்ந்து, 7-ந் தேதி அதிகாலை செல்லாண்டி நகர் கிருஷ்ணகிரி நகர், லைன்கொள்ளை வழியாக சாமந்தமலைக்கு சென்றன.
யானைகள் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளையும் உடைத்து சென்றன. அன்று சாமந்தமலை விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி பெருமாள் என்பவர் யானைகள் தாக்கியதில் உயிரிழந்தார்.
தொடர்ந்து கீழ்பூங்குருத்தி அருகே மூலக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். அப்போது யானைகள் மகராஜகடை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை நாசம் செய்து, நாரலப்பள்ளி வழியாக ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.
நேற்று முன்தினம் இரவு ஆந்திர வனப்பகுதியை யொட்டியுள்ள மொட்டுலுசேனு, சிக்கநத்தம், மல்லனூர் கிராமங்களில் புகுந்த இரு யானைகளும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன.
இவ்விரு யானைகளையும் ஆந்திர வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மல்லனூர், பைபாளம், குசூர் பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு ரெயிலில் செல்வதற்காக மல்லனூர் ரெயில் நிலையம் அருகே சென்ற பருத்திகொல்லையை சேர்ந்த உஷா (வயது34) என்ற பெண்ணை யானைகள் தாக்கி கொன்றது.
பின்னர் அதே பகுதி வழியாக வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற யானைகள், இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த மல்லனூரை சேர்ந்த சிவலிங்கம் (65) என்பவரையும் தாக்கியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தமிழக எல்லையான பச்சூர், ஆந்திர எல்லையான மல்லனூர் அருகே சுற்றுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரு மாநில வனத்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை கண்கா ணித்து வருகிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்திற்குள் வந்த இந்த 2 யானைகள் ராம்குமார் (27) என்பவரை தாக்கி கொன்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஏப்ரல்) 21-ந் தேதி தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிகொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த காளியப்பன் (வயது 70) என்பவரை இந்த யானைகள் தாக்கி கொன்றன.
தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி யை சேர்ந்த வேடி (55) என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 7-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் இந்த யானைகள் தாக்கியதில் பலியானார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆந்திர எல்லைக்கு சென்ற இந்த யானைகள் தாக்கி அந்த பகுதியை சேர்ந்த உஷா, சிவலிங்கம் ஆகிய 2 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 மாதத்தில் 6 பேரை இந்த 2 யானைகளும் கொன்றுள்ளன.






