கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

சிங்கிரிப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள், நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசியை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களிலும், டாடா சுமோ கார் மற்றும் அந்த காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது24) என்பவரையும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மூங்கில்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com