என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக தேர்தலில் அமோக வெற்றி:ஓசூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்துகொண்டாட்டம்
    X

    கர்நாடக தேர்தலில் அமோக வெற்றி:ஓசூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்துகொண்டாட்டம்

    • அமோக வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.
    • மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர்,

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரல் கட்சி அமோக வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கவுள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலைக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    மேலும் இதில், மாநகர தலைவர் தியாகராஜன், சிவப்பா ரெட்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, ஓ.பி.சி. பிரிவு நிர்வாகி குமார், கீர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×