என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமனாரின் பாலியல் தொல்லையை தடுக்காத கணவரை கண்டித்து   தர்ணாவில் ஈடுபட்ட பெண்
    X

    மாமனாரின் பாலியல் தொல்லையை தடுக்காத கணவரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்

    • கடந்த சில மாதங்களாக விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் பாலியல் ரீதியாத பல தொந்தரவு அளித்து வருவதாகவும் கணவரிடம் கூறியுள்ளார்.
    • தற்போது வரை பூட்டிய வீட்டின் முன்பு விக்னேஸ்வரி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது28). இவரது கணவர் திருப்பதி (32) . இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் நிதர்ஷனா என்ற மகள் உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் பாலியல் ரீதியாத பல தொந்தரவு அளித்து வருவதாகவும், இதுகுறித்து அவர் கணவரிடம் கூறியபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது.

    இதன் காரணமாக நேற்று மாலை விக்ணேஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றி கணவர் திருப்பதி பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், ஊர் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், வீட்டின் முன்பு தனது மகள் நிதர்ஷனாவுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து தற்போது வரை பூட்டிய வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

    மாமனார், மாமியார் மற்றும் கணவர் 3 பேரையும் வீட்டை பூட்டி விட்டு அவர்களது நிலத்தில் உள்ள கொட்டகையில் குடியிருந்து வரும் நிலையில், தனது உரிமைக்காக பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தைகளுடன் போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×