என் மலர்
கிருஷ்ணகிரி
- போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
- கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரி டமும் பரிந்துரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற 28-ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலலயும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர்.
2022-23-ம் ஆண்டுக்கான 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 28-ந் தேதியன்று கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரி டமும் பரிந்துரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜயநகரர் காலத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது தெரியவருகிறது.
- தானமளித்ததை தெரிவிக்கும் எழுத்துப் பொறிப்பு பித்தளை கவசத்தின்கீழ் பட்டி ஒன்றில் வெட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், மாவட்ட அரசு அருங்காட்சி யகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன வைப்பு அறையில், விஜயநகரர் காலத்தைச் சேர்ந்த சிறிய கல்வெட்டினைக் கண்டறிந்தனர்.
இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
இக்கல்வெட்டு விஜயநகரர் காலத்தைச் சேர்ந்தது. இது ஹரிஹரன் குமாரன் இம்மடி என்று குறிப்பிடுவதிலிருந்து, இக்கல்வெட்டு இரண்டாம் ஹரிஹரனின் மகனான இரண்டாம் புக்கராயனை குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்பகுதி உடைந்துள்ளது. எனவே இக்கோவில் விஜயநகரர் காலத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது தெரியவருகிறது.
மேலும் இச்சுவற்றில் உள்ள தவழும் கிருஷ்ணர், காலிய கிருஷ்ணர் மற்றும் குழல் ஊதும் கிருஷ்ணர் ஆகிய சிற்பங்களும் விஜயநகரர் காலத்தைச் சேர்ந்தவைகளாகும்.
அதே போல், இக்கோவிலின் பழைய தேரில், 1898ல் இந்த தேரை லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு, வாடமங்கலம் ஜாகிர்தார் தர்மாசாரி என்பவர் தானமளித்ததை தெரிவிக்கும் எழுத்துப் பொறிப்பு பித்தளை கவசத்தின்கீழ் பட்டி ஒன்றில் வெட்டப்பட்டுள்ளது. இதனை செய்த சிற்பி கிருஷ்ணகிரி மணியகாரர் வெங்கடாசாரியின் வளர்ப்பு மகன் வெங்கடாசாரி என்பவராவார்.
இந்த தேரும் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், சரண்குமார், முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- 2 மணி நேரம் நடைபெறும் காட்சியில் 26 வகையான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
- நிகழ்ச்சியில் குதிரை, நாய்கள் போன்ற விலங்குகளும் சாகசங்கள் புரிந்து குழந்தைகளை மகிழ்விக்கின்றன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஜம்போ சர்க்கஸ் நடை பெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி வருகிற 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜம்போ சர்க்கஸ் நிறுவன உரிமையாளர்கள் ஸ்ரீ அஜெய் சங்கர், அசோக் சங்கர் ஆகியோர் கூறியதாவது:-
ஜம்போ சர்க்கஸ் 1977-ம் ஆண்டு பீகார் மாநிலம், தானாப்பூர் நகரில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 45 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
இது பறக்கும் பாவை. அபூர்வ சகோதரர்கள், மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்களில் இடம்பெற்ற ஜெமினி சர்க்கஸ் குழுவின் சகோதர நிறுவனம் ஆகும்.
ஜம்போ சர்க்கசில் மராட்டியம், ஒடிசா, பீகார், கேரளா, தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களையும், ஆப்பிரிக்கா, நேபாளம் போன்ற வெளிநாடுகளையும் சேர்ந்த 175 கலைஞர்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். 2 மணி நேரம் நடைபெறும் காட்சியில் 26 வகையான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில் நடத்தப்படும் மரண கிணறு சாகச நிகழ்ச்சி டார்க் லைட் ஒளி அமைப்பில் பார்ப்பதற்கு பரசவசமூட்டும் வகையில் உள்ளது. மேலும், நிகழ்ச்சியில் குதிரை, நாய்கள் போன்ற விலங்குகளும் சாகசங்கள் புரிந்து குழந்தைகளை மகிழ்விக்கின்றன.
சர்க்கஸ் நிகழ்ச்சி தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணி ஆகிய நேரங்களில் வார நாட்களில் நடத்தப்படுகிறது. இந்த சர்க்கஸ் வருகிற 26-ம் தேதி வரை, ஓசூரில் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கோவில் அருகே சாலை அமைக்கும் பணி செய்ய முயற்சித்தனர்.
- கிரேன் முலம் பாது காப்பாக தூக்கி நகர்த்தி வைத்து உள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, தருமபுரி- ஒசூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சாலை அமைப்பதற்காக மிக பலமை வாய்ந்த புளியமரம், அரசமரம், மற்றும் விளை நிலங்கள், வீடுகள் மற்றும் அரசு பள்ளிகள், கோவி ல்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை அகற்றி புதிய சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில் உத்தன ப்பள்ளி அருகே மெட்டறை பகுதியில் 10-ஆண்டுக்கு முன்னர் பழைய சாலை அருகே ஆஞ்சநேயர் கோவில் காங்கீரிட் மூலம் கட்டப்பட்டது.
இப்பகுதியை சேர்ந்த மெட்டரை, அலேசீபம், தேவசந்திரம், லிங்கனம் பட்டி மற்றும் சில கிராம மக்கள் பல லட்சம் மதிப்பில் கோவிலை கட்டி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சில மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் கோவில் அருகே சாலை அமைக்கும் பணி செய்ய முயற்சித்தனர்.
இதனையடுத்து கோவிலை நெடுஞ்சாலை ஒப்பந்ததார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவிலை நூதன முறையில் கிரேன் முலம் பாது காப்பாக தூக்கி நகர்த்தி வைத்து உள்ளனர்.
உரிய இடம் பார்த்து கோவிலை வைக்க இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பேரூராட்சி பூங்காவில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறை சார்பில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தாசில்தார் அலுவலகம் மற்றும் லக்க சந்திரம் அருகே உள்ள பேரூராட்சி பூங்காவில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சரவண மூர்த்தி, வனச்சரக அலுவலர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
அதேபோல் லக்கசந்திரம் கிராமம் அருகே பேரூராட்சி பூங்கா, பள்ளி வளாகங்களில் வனத்துறை சார்பில் பல் வேறு வகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- வீட்டின் முன் கேட்டின் கதவில் பூட்டு உடைக்கபட்டு இருந்தது.
- போலீசார், கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூளகிரி:
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சிவக்குமார் (வயது39). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேரிகை பகுதி ரிங்ரோடு அண்ணா நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் சிவக்குமார் பைனான்ஸ் நிறுவனத்தையும் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்ததால், மனைவியையும், குழந்தையையும் அழைத்து வருவதற்காக சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் கேட்டின் கதவில் பூட்டு உடைக்கபட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 45 பவுன் நகைகளை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தென் பெண்ணை ஆறு, பாறைகளின் மீது அருவி போல் செல்கிறது.
- அங்கு குளித்தபோது, ஜெகதீசன் நீரில் மூழ்கினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் எஸ்.பி.எம் காலனியை சேர்ந்தவர் குமரேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெகதீசன் (வயது 17).தனியார் பள்ளியில் பிளஸ் 1 முடித்திருந்தார்.
இவர் கடந்த, 1-ம் தேதி மதியம் கூட்டூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்பகுதியில் தென் பெண்ணை ஆறு, பாறைகளின் மீது அருவி போல் செல்கிறது. மாணவர் ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு குளித்தபோது, ஜெகதீசன் நீரில் மூழ்கினார்.
சூளகிரி போலீசார், தீயணைப்புத் துறையினர் மாணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் போராடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன உபகரணங்களுடன் மாணவரை 7 -வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
- கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அச்சிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசா (வயது24). இவர் தளியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கணேசன் (25). உறவினர்களான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணேசன், அவரது நண்பர்கள் கீச்சானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு (28), வேணு (18), விஜய் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார். இதில் காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சீனிவாசா தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன், ராமு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த பவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சவரபாதம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது38). விவசாயி. இவரது மகன் பவன் (13). இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ் (28) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் தளி வரை சென்றார். அப்போது அவர்கள் பாலதோட்டப்பள்ளி-தேன்கனிக்கோட்டை சாலை அருகே வந்தபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று பரமேஸ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த பவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த பரமேஸை சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தளி போலீசார் உடனே அங்கு வந்து விபத்தில் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
- பிரதீக் தனது மனைவி ஸ்ரீநிதியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
- போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கட்டியானபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீக் ஸ்ரீவசத்வ் (வயது32). இவரது மனைவி ஸ்ரீநிதி (29). கணவன்-மனைவி இருவரும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பிரதீக் தனது மனைவி ஸ்ரீநிதியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீநிதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் பிரதீக் ஸ்ரீவசத்வ் மற்றும் மாமனார் ராஜேந்திரபிரசாத், மாமியார் ஷப்னாவதி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கால்வாய் அருகே பாரத் நடந்து சென்றான். அப்போது அந்த கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உல்லட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாக்கப்பன். இவரது மகன் நிலவரசன் (10). இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது நிலவரசன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தந்தை சாக்கப்பன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழர்களின் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில், பிரியாணி விருந்தை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடந்தது.
இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பிரியாணி விருந்தை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராசன், சித்ரா சந்திரசேகர், தி.மு.க நிர்வாகிகள் ரியாஸ், கராமத், நகராட்சி கவுன்சிலர்கள் சந்தோஷ், ஜெயக்குமார், வேலுமணி, பழனி, பரந்தாமன், செந்தில்குமார், மதன்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






