என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கிய மாணவரை 7-வது நாளாக தேடும் பணி தீவிரம்
- தென் பெண்ணை ஆறு, பாறைகளின் மீது அருவி போல் செல்கிறது.
- அங்கு குளித்தபோது, ஜெகதீசன் நீரில் மூழ்கினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் எஸ்.பி.எம் காலனியை சேர்ந்தவர் குமரேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெகதீசன் (வயது 17).தனியார் பள்ளியில் பிளஸ் 1 முடித்திருந்தார்.
இவர் கடந்த, 1-ம் தேதி மதியம் கூட்டூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்பகுதியில் தென் பெண்ணை ஆறு, பாறைகளின் மீது அருவி போல் செல்கிறது. மாணவர் ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு குளித்தபோது, ஜெகதீசன் நீரில் மூழ்கினார்.
சூளகிரி போலீசார், தீயணைப்புத் துறையினர் மாணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் போராடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன உபகரணங்களுடன் மாணவரை 7 -வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






