என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 26 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு எடுத்து சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
    • 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் அலுவலர்கள் நேற்று கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பசவண்ணகோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும், அந்த அரிசியை பர்கூர், மல்லப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கர்நாடகாவிற்கு எடுத்து சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து 1300 கிலோ ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த ஆந்திர மாநிலம் தளவாய் கொத்தப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 30), கலீம்(22) ஆகிய 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    அதே போல தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் வேப்பனப்பள்ளி அருகே நாடுவானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் அதிகாரிகளை பார்த்ததும், மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து மோட்டார்சைக்கிளை சோதனை செய்த போது அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ரேஷன் அரிசி மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்தி வந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலில் கலச பூஜை, குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை நடந்தன.
    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரியமாரியம்மன் கோவிலில், நவசண்டி மகாயாக இரண்டு நாள் விழா தொடங்கியது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், சண்டி பாராயணம், பூஜைகள் நடந்தன.

    பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், மாலை 5 மணிக்கு கலச பூஜை, குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இன்று காலை கோபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், நவசண்டி மகா யாகம் ஆகியவை நடைபெற உள்ளன.

    • ராஜேந்திரன் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 4 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ராஜேந்திரன். இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இவர் மேல் தளத்தில் வீடு வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டின் முன்பு ராஜேந்திரனுக்கு சொந்தமான ஒரு இருசக்கர வாகனம், மற்றும் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களின் மூன்று இருசக்கர வாகனங்கள் என மொத்தம் நான்கு இருசக்கர வாகனங்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளார்.

    இந்த தீயானது அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. நள்ளிரவு என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் எரிந்து வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல்கள் எரிந்து ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதற துவங்கியுள்ளது.

    இந்த சத்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்து வெளியில் வராத அளவிற்கு தீ கொழுந்து விட்டு தெரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அருகில் இருந்தவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அனைத்து இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக கருகின.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து ஆனது முன்விரோதம் காரணத்தால் ஏற்பட்டதா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் புரோக்கர்களான 3 பேரை கைது செய்தனர்.
    • வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் அட்கோ போலீசார் சோதனை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அஞ்சலகிரியை சேர்ந்த சின்னபிட்டப்பா மகன் சீனிவாஸ் (வயது25), கிருஷ்ணகிரி பாரதிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திருப்பதி (32), பெங்களூரு பண்டே பாளையா சின்னசாமி லேஅவுட்டை சேர்ந்த முனுசாமி என்கிற முனி (48) என்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்து வடமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும் தெரிந்தது. உடனே போலீசார் புரோக்கர்களான 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஓசூர் அட்கோ போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியில் வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று விபசாரத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணையும், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித் (வயது24), வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • இடைநிற்றல் மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அம்மாணவர்களை பள்ளியில் சேர்க்க பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா கண்ணண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளின் தூய்மை பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 -ம் தேதியும், 6 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 - ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள் என 1,714 பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 18 என மொத்தம் 1,732 பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, வகுப்பறைகள், கழிப்பறை, பள்ளி வளாகம், சமையல் கூடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்ட பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு, இடைநிற்றல் மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அம்மாணவர்களை பள்ளியில் சேர்க்க பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின் போது, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, மகேஷ்குமார், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் பூம்பாவை, பள்ளி தலைமையாசிரியர்கள் சந்திரா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுபாட்டை இழந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 65).

    விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் வரைசென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுபாட்டை இழந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரபத்திரனை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி விவசாயிகள் மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக 2023-24ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் (கிராம ஊராட்சிக்கு இரண்டு அல்லது மூன்று) வழங்க ஒதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சிறு, பெறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்சி., எஸ்டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டில் 63 கிராம ஊராட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பர்கூர் வட்டாரத்தில் புளியம்பட்டி, பாலேதோட்டம், கந்திகுப்பம், கொண்டப்ப நாயனப்பள்ளி, ஐகொந்தம்கொத்தப்பள்ளி, வலசகவுண்டனூர், ஓசூர் வட்டாரத்தில் சென்னசந்திரம், நல்லூர், பாலிகானப்பள்ளி, படுதேப்பள்ளி, பூனப்பள்ளி, காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் தட்ரஅள்ளி, மாரிசெட்டிஅள்ளி, கொட்டபட்டி, ஆவத்தவாடி, பாரூர், பன்னிஹள்ளி, கெலமங்கலம் வட்டாரத்தில் ராயக்கோட்டை, திம்ஜேப்பள்ளி, ஒசபுரம் செட்டிப்பள்ளி, தவரக்கரை, பைரமங்கலம், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பெரியகோட்டப்பள்ளி, கம்மம்பள்ளி, அகரம், பெல்லாரம்பள்ளி, பெல்லம்பள்ளி, கொண்டேப்பள்ளி, மத்தூர் வட்டாரத்தில் வாலிப்பட்டி, நாகம்பட்டி, ராமகிருஷ்ணபதி,

    குன்னத்தூர், வாணிபட்டி, சூளகிரி வட்டார்தில் சூளகிரி, மருதாண்டப்பள்ளி, பண்ணப்பள்ளி, பி.குருபரப்பள்ளி, தோரிப்பள்ளி, சின்னாரன்தொட்டி, செம்பரசனப்பள்ளி, ஆலூர், தளி வட்டாரத்தில் தளி, குந்துகோட்டை, மருதனப்பள்ளி, நொகனூர், சாரகப்பள்ளி, சந்தனூ, கொமரனப்பள்ளி,

    தாராவீந்திரம், கெம்பட்டி, மாதேகொண்டப்பள்ளி, ஊத்தரங்கரை வட்டாரத்தில் கீழ் மாத்தூர், நடுபட்டி, மூங்கிலேரி, கருமண்டபதி, பெரியதள்ளப்பாடி, படப்பள்ளி, வேப்பனஹள்ளி வட்டா ரத்தில் பீமாண்டப்பள்ளி, பாலனப்பள்ளி, ஐப்பி கானப்பள்ளி,

    குந்தாரப்பள்ளி, சின்னமணவாரனப்பள்ளி, குரியனப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவி மானியத்தில் பெற சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 14-ந் தேதியும் நேரடி முறையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 2023-24-ம் ஆண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவு களுக்கு பொதுக்கலந்தாய்வு முதல் கட்டமாக மாணவர் சேர்க்கை

    கல்லூரியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பி.காம்., பி.பி.ஏ.., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 9-ந் தேதியும் (நாளை), பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 12-ந் தேதியும், பி.ஏ., வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்க வருகிற 13-ந் தேதியும், பி.ஏ., தமிழ், பி.லிட், தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 14-ந் தேதியும் நேரடி முறையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்குப் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த கலந்தாய்வின் போது, இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இஎம்ஐஎஸ்), மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்), சாதிச் சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ, மார்பளவு சேர்க்கைக் கட்டணமாக, கலைப்பிரிவுக்கு ரூ-.2795, அறிவியல் பிரிவிற்கு ரூ.2815, கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு காலி யிடங்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • விவசாயி களின் உடல்நிலையைச் செவிலியர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 5-ம் தேதி முதல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 4-வது நாளாக உண்ணா விரதப் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி களின் உடல்நிலையைச் செவிலியர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல, வருவாய்த் துறை அதிகாரி களும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

    • மாலையில் அறைக்கு திரும்பவந்து அவர்கள் பார்த்தபோது அங்கு பிவின்டிப்பு தூக்கில் பிணமாக கிடந்தார்.
    • காதல் தோல்வியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
    • பாட்டிலில் பெட்ரோல் வைத்து ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 20). இவர் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் தினமும் சதீஸ்குமார் மதுக்குடித்துவிட்டு வந்து அந்த பகுதியில் பொதுமக்களை கையால் அடித்து மிரட்டுவதும், பாட்டிலில் பெட்ரோல் வைத்து ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • அந்த வழியாக ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    உத்தரபிரதேசம் மாநிலம் பிஜோரி பகுதியைச் சேர்ந்த சூரன் (வயது45). மேஸ்திரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சப்பக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில சூரனும், மற்றொரு வடமாநில தொழிலாளியான தர்காஷ்வரன் ஷகானி என்பவரும் சப்பக்கல் அருகே உளிவிரனப்பள்ளி அருகே நடந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்காஷ்வரன் ஷகானியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×