என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    X

    ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

    • 26 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு எடுத்து சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
    • 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் அலுவலர்கள் நேற்று கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பசவண்ணகோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும், அந்த அரிசியை பர்கூர், மல்லப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கர்நாடகாவிற்கு எடுத்து சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து 1300 கிலோ ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த ஆந்திர மாநிலம் தளவாய் கொத்தப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 30), கலீம்(22) ஆகிய 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    அதே போல தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் வேப்பனப்பள்ளி அருகே நாடுவானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் அதிகாரிகளை பார்த்ததும், மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து மோட்டார்சைக்கிளை சோதனை செய்த போது அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ரேஷன் அரிசி மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்தி வந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×