என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அரசு  கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
    X

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

    • 14-ந் தேதியும் நேரடி முறையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 2023-24-ம் ஆண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவு களுக்கு பொதுக்கலந்தாய்வு முதல் கட்டமாக மாணவர் சேர்க்கை

    கல்லூரியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பி.காம்., பி.பி.ஏ.., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 9-ந் தேதியும் (நாளை), பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 12-ந் தேதியும், பி.ஏ., வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்க வருகிற 13-ந் தேதியும், பி.ஏ., தமிழ், பி.லிட், தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 14-ந் தேதியும் நேரடி முறையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்குப் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த கலந்தாய்வின் போது, இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இஎம்ஐஎஸ்), மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்), சாதிச் சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ, மார்பளவு சேர்க்கைக் கட்டணமாக, கலைப்பிரிவுக்கு ரூ-.2795, அறிவியல் பிரிவிற்கு ரூ.2815, கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு காலி யிடங்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×