search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானியத்தில் பவர் டில்லர், களை எடுக்கும் எந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
    X

    மானியத்தில் பவர் டில்லர், களை எடுக்கும் எந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

    • மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி விவசாயிகள் மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக 2023-24ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் (கிராம ஊராட்சிக்கு இரண்டு அல்லது மூன்று) வழங்க ஒதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சிறு, பெறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்சி., எஸ்டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டில் 63 கிராம ஊராட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பர்கூர் வட்டாரத்தில் புளியம்பட்டி, பாலேதோட்டம், கந்திகுப்பம், கொண்டப்ப நாயனப்பள்ளி, ஐகொந்தம்கொத்தப்பள்ளி, வலசகவுண்டனூர், ஓசூர் வட்டாரத்தில் சென்னசந்திரம், நல்லூர், பாலிகானப்பள்ளி, படுதேப்பள்ளி, பூனப்பள்ளி, காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் தட்ரஅள்ளி, மாரிசெட்டிஅள்ளி, கொட்டபட்டி, ஆவத்தவாடி, பாரூர், பன்னிஹள்ளி, கெலமங்கலம் வட்டாரத்தில் ராயக்கோட்டை, திம்ஜேப்பள்ளி, ஒசபுரம் செட்டிப்பள்ளி, தவரக்கரை, பைரமங்கலம், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பெரியகோட்டப்பள்ளி, கம்மம்பள்ளி, அகரம், பெல்லாரம்பள்ளி, பெல்லம்பள்ளி, கொண்டேப்பள்ளி, மத்தூர் வட்டாரத்தில் வாலிப்பட்டி, நாகம்பட்டி, ராமகிருஷ்ணபதி,

    குன்னத்தூர், வாணிபட்டி, சூளகிரி வட்டார்தில் சூளகிரி, மருதாண்டப்பள்ளி, பண்ணப்பள்ளி, பி.குருபரப்பள்ளி, தோரிப்பள்ளி, சின்னாரன்தொட்டி, செம்பரசனப்பள்ளி, ஆலூர், தளி வட்டாரத்தில் தளி, குந்துகோட்டை, மருதனப்பள்ளி, நொகனூர், சாரகப்பள்ளி, சந்தனூ, கொமரனப்பள்ளி,

    தாராவீந்திரம், கெம்பட்டி, மாதேகொண்டப்பள்ளி, ஊத்தரங்கரை வட்டாரத்தில் கீழ் மாத்தூர், நடுபட்டி, மூங்கிலேரி, கருமண்டபதி, பெரியதள்ளப்பாடி, படப்பள்ளி, வேப்பனஹள்ளி வட்டா ரத்தில் பீமாண்டப்பள்ளி, பாலனப்பள்ளி, ஐப்பி கானப்பள்ளி,

    குந்தாரப்பள்ளி, சின்னமணவாரனப்பள்ளி, குரியனப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவி மானியத்தில் பெற சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×