என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில், ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி
    X

    சர்க்கசில், பெண் ஒருவர் சாகசம் நிகழ்த்துவதை படத்தில் காணலாம்.

    ஓசூரில், ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி

    • 2 மணி நேரம் நடைபெறும் காட்சியில் 26 வகையான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் குதிரை, நாய்கள் போன்ற விலங்குகளும் சாகசங்கள் புரிந்து குழந்தைகளை மகிழ்விக்கின்றன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஜம்போ சர்க்கஸ் நடை பெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி வருகிற 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜம்போ சர்க்கஸ் நிறுவன உரிமையாளர்கள் ஸ்ரீ அஜெய் சங்கர், அசோக் சங்கர் ஆகியோர் கூறியதாவது:-

    ஜம்போ சர்க்கஸ் 1977-ம் ஆண்டு பீகார் மாநிலம், தானாப்பூர் நகரில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 45 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

    இது பறக்கும் பாவை. அபூர்வ சகோதரர்கள், மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்களில் இடம்பெற்ற ஜெமினி சர்க்கஸ் குழுவின் சகோதர நிறுவனம் ஆகும்.

    ஜம்போ சர்க்கசில் மராட்டியம், ஒடிசா, பீகார், கேரளா, தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களையும், ஆப்பிரிக்கா, நேபாளம் போன்ற வெளிநாடுகளையும் சேர்ந்த 175 கலைஞர்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். 2 மணி நேரம் நடைபெறும் காட்சியில் 26 வகையான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இதில் நடத்தப்படும் மரண கிணறு சாகச நிகழ்ச்சி டார்க் லைட் ஒளி அமைப்பில் பார்ப்பதற்கு பரசவசமூட்டும் வகையில் உள்ளது. மேலும், நிகழ்ச்சியில் குதிரை, நாய்கள் போன்ற விலங்குகளும் சாகசங்கள் புரிந்து குழந்தைகளை மகிழ்விக்கின்றன.

    சர்க்கஸ் நிகழ்ச்சி தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணி ஆகிய நேரங்களில் வார நாட்களில் நடத்தப்படுகிறது. இந்த சர்க்கஸ் வருகிற 26-ம் தேதி வரை, ஓசூரில் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×