என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பிரசாந்த் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது.
    • ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த தேங்காய் மட்டை எடுத்து பிரசாந்தை சரமாரியாக தாக்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது33). டிரைவரான இவர் அதேபகுதியில் உள்ள தனியார் தண்ணீர்கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் கடந்த 9 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தை முல்லை நகரைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பிரசாந்த் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் தரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    இதன்காரணமாக கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சம்பளம் உயர்த்தி தருவதாகவும் உடனே பிரசாந்தை வேலைக்கு வருமாறும் ரமேஷ் தெரிவித்தார். அவரது பேச்சை கேட்டு பிரசாந்த் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு ரமேஷூக்கும், பிரசாந்திற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த தேங்காய் மட்டை எடுத்து பிரசாந்தை சரமாரியாக தாக்கினார். இதில் பிரசாந்த பலத்த காயமடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரசாந்த் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    • தேர்த்திருவிழாவின் இறுதி நாளான நேற்று வின்சென்ட் குமார் தலைமையில் கூட்டுத்திருபலி நடை பெற்றது.
    • மாலை வண்ண, வண்ண விளக்கு களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் பவனி தருமபுரி மறை மாவட்ட இயக்குநர் ஜாக்சன் லூயிஸ்சால் மந்தரிக்கப்பட்டு தேவால யத்தை சுற்றி வலம் வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேர்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

    7, 8 ஆகிய 2 நாட்களில் ஜெபவழிபாடும், திருப்பலியும் வேலுர் மறை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தேர்த்திருவிழாவின் இறுதி நாளான நேற்று வின்சென்ட் குமார் தலைமையில் கூட்டுத்திருபலி நடை பெற்றது. மாலை வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர்பவனி தருமபுரி மறை மாவட்ட இயக்குநர் ஜாக்சன் லூயிஸ்சால் மந்தரிக்கப்பட்டு தேவாலயத்தை சுற்றி வலம் வந்தது.

    இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுண்டம்பட்டி, புஷ்பகிரி மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கொண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமையேற்று வினாடி, வினா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவர்கள் வருகின்ற நாளை நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான ஆர்பிஐ வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஒன்றிய அளவிலான ஆர்.பி. ஐ. சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்வினை இந்தியன் வங்கி சூளகிரி கிளை மேலாளர் நிவேதிதா, வேளாண்துறை மேலாளர் வேலன் முன்னிலை வகித்தனர்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமையேற்று வினாடி, வினா போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் சூளகிரி ஒன்றியத்தை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய பொறுப்பாசிரியருடன் ஒரு அணிக்கு இரண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டியின் இறுதியில் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தனுஷ் மற்றும் யஷ்வந்த் ஆகிய மாணவர்கள் முதல் பரிசினை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முகமது அலி மற்றும் சங்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தினர்.

    மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் சுதா, செந்தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் வருகின்ற நாளை நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான ஆர்பிஐ வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    • 10 ஒன்றியங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.
    • குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 413 ஒன்றியத்தில் உள்ள அனைத்து குறுவள மையங்களில், 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, உடல் நலம், ஆரோக்கியம், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல் உள்ளடங்கிய கல்வி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், 10 ஒன்றியங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.

    கிருஷ்ணகிரி ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை குறுவளமைய மேற்பார்வையாளர் அசோக், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு பயிற்றுனர் அருண்குமார், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், உள்ளடங்கிய கல்வி, தேர்வு சலுகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.

    இந்த பயிற்சியில், மனநலம், உடல் நலம், ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மாணவர்கள் கற்றல் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். ஆப் மூலமாக 23 கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் நலனில் அக்கரை செலுத்தி குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் சரியான நேரத்தில் உறங்க வேண்டும். அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்கூடாது.

    பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். பூச்சி கொல்லி பயன்படுத்திய பழங்கள், காய்கறிகளை தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம், மன நலம், ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே சக மாணர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளி வகுப்பறை சூழலில் நன்றாக படித்து சாதனையாளராக முடியும் என்று அறிவுத்தப்பட்டது.

    • மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் சமைக்க அருகே கிராம சுகாதார மைய பகுதில் உள்ள அறையில் சமையல் செய்து மாணவர் களுக்கு வழங்கி வருகின்றனர்.
    • பள்ளி வகுப்பு அறைகட்டிடம், சமையல் கூடம், கழிப்பிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மருதாண்டப்பள்ளி ஊராட்ச்சியில் மருதாண்டப்பள்ளியில் அரசு ஆரம்பள்ளி இயங்கி வருகிறது. முதலில் தெலுங்கு பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி தமிழ் பள்ளியாக மாறி பல ஆண்டுகளாகிறது.

    இந்தப் பள்ளி மருதாண்டப்பள்ளி, வரதாபுரம், டேம்கொத்தூர், ஒட்டர் பாளையம் ஆசிய பகுதியில் இருந்து 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

    பள்ளியில் மூன்று அரசு சார்ந்த ஆசிரியரும், 2 ஆசிரியர் தனியார் மூலம் அமர்த்தபட்ட ஆசிரியர்கள் மொத்தம் 5 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றனர்.

    பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகம் ஆனால் போதுமான வகுப்பறை இல்லை. பள்ளியில் இரண்டு கட்டிடம் அதில் ஒரு கட்டிடத்தில் 2 வகுப்பறை உள்ளது.

    மற்றொரு கட்டிடத்தில் 2 வகுப்பறை, அதில் ஒரு கட்டிடம் பழுதானதால் அதை சில வருடம் முன்பு இடித்து விட்டு இன்னும் புதிய வகுப்பறை இல்லாததால் ஒரே கட்டிடத்தில் 2 வகுப்பறையில் அதே வகுப்பறை உள்ளேயும் வராண்டாவில் மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை பழுதானதால் அதை இடித்து தள்ளினர். மாணவர்கள் பள்ளி அருகே வெளி பகுதியில் சிறுநீர் கழிக்க செல்கின்றனர்.

    சமையல் அறையும் பழுது என்பதால் அதையும் இடித்து விட்டனர். தற்போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் சமைக்க அருகே கிராம சுகாதார மைய பகுதில் உள்ள அறையில் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    அரசு அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி. தலைவி நாகரத்தினா சித்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா வேணுவிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

    இந்தப் பள்ளிக்கு போர்கால அடிப்படையில் பள்ளி வகுப்பு அறைகட்டிடம், சமையல் கூடம், கழிப்பிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடந்தது.
    • கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 404 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்த ரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) வசந்தி தலைமை தாங்கினார்.

    இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வாரிசு உரிமை, வங்கி வழக்குகள் மற்றும் சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

    இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வாஹ் அமகது, மாவட்ட சட்ட ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர் மற்றும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், எதிர்மனு தாரர்கள் பங்கேற்றனர்.

    அதன்படி, கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 404 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில் 56 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 71 லட்சத்து 91 ஆயிரத்து 629க்கு தீர்வு காணப்பட்டது.

    • தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர் விற்க்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் குரூப் தேர்வு களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கிறது.இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர் விற்க்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த இணைப்பின் https://rb.gy/6ei6u மூலம் தங்களை பதிவு செய்து க்கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு 04343-291983 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.19.80 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளின் முக்கிய சாலைகள் குண்டு குழியுமாக இருந்தது. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, 1வது வார்டு முதல் 16 வது வார்டு வரை ரூ.9.90 லட்சம் மற்றும், 16 முதல் 33வது வார்டு வரை ரூ.9.90 லட்சம் என மொத்தம் ரூ.19.80 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள குண்டு குழியுமான சாலை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு களிலும் மழைக்காலம் தொடங்கு வதற்குள், பழுத டைந்த அனைத்து சாலை களும் சரி செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், துணை மாவட்ட செயலாளர் சாவித்திரி கடலரசமூர்த்தி, நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயிஷா முகமதுஜான், சுதா சந்தோஷ் குமார், ஜெயக்குமார், பாலாஜி, மதன்ராஜ், நகராட்சி இள நிலை உதவியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில், 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
    • அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் சாலை சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுகுமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள தனியார் கட்டட குடோனில் சோதனையிட்டபோது, 50 கிலோ அளவிலான, 42 மூட்டைகளில், 2ஆயிரத்து 100 கிலோ ரேசன் அரிசி பதுக்கியிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    அதேபோல திருவண்ணாமலை சாலை, அரசு நகர்புற சுகாதார நிலையம் அருகில் ஒரு வீட்டில், 50 கிலோ அளவிலான, 10 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    • வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் கற்றுகொள்வதற்காக குளிக்க சென்றான்.
    • அந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் சிங். இவரது மகன் மான்சிங் (வயது12). இந்த சிறுவன் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் கற்றுகொள்வதற்காக குளிக்க சென்றான். அப்போது அந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுகுறித்து சிறுவனின் தந்தை திலீப்சிங் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சூளகிரிக்கு சென்றார்.
    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது39).

    விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சூளகிரிக்கு சென்றார்.

    அப்போது அவர் பாலனம்பட்டி அருகே ராயக்கோட்டை-சூளகிரி சாலையில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய மடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2.40 கி.மீ. நீளம் சாலையை ரூ 17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலபடுத்தும் பணி நடக்கிறது.
    • சரி மட்ட அளவுகள், அடர்த்தி ஆகியவற்றை சரிபார்க்கும் கருவிகளை கொண்டு சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் வச்சலா வித்தியானந்தி, நேரில் களஆய்வு செய்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலையில் நல்லராலப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.40 கி.மீ. நீளம் சாலையை ரூ 17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலபடுத்தும் பணி நடக்கிறது.

    மேலும் தேன்கனி க்கோட்டை-கெலமங்கலம் வழி உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 8-6 கி.மீ நீளம் ரூ 11-00 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் சாலை பணிகளின் நீளம், அகலம், மற்றும் சரி மட்ட அளவுகள், அடர்த்தி ஆகியவற்றை சரிபார்க்கும் கருவிகளை கொண்டு சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் வச்சலா வித்தியானந்தி, நேரில் களஆய்வு செய்தார்.

    இதில் தேன்கனிக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் திருமால்செல்வன், கிருஷ்ணகிரி உதவி கோட்டப் பொறியாளர் பத்மாவதி, ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர் மன்னன், கிருஷ்ணகிரி தரக்கட்டுப்பாடு இளநிலை பொறியாளர் வெண்ணிலா, சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×