என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு போட்டி"
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமையேற்று வினாடி, வினா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்கள் வருகின்ற நாளை நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான ஆர்பிஐ வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஒன்றிய அளவிலான ஆர்.பி. ஐ. சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வினை இந்தியன் வங்கி சூளகிரி கிளை மேலாளர் நிவேதிதா, வேளாண்துறை மேலாளர் வேலன் முன்னிலை வகித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமையேற்று வினாடி, வினா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சூளகிரி ஒன்றியத்தை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய பொறுப்பாசிரியருடன் ஒரு அணிக்கு இரண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் இறுதியில் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தனுஷ் மற்றும் யஷ்வந்த் ஆகிய மாணவர்கள் முதல் பரிசினை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முகமது அலி மற்றும் சங்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தினர்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் சுதா, செந்தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் வருகின்ற நாளை நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான ஆர்பிஐ வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.






