search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு
    X

    ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

    • 10 ஒன்றியங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.
    • குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 413 ஒன்றியத்தில் உள்ள அனைத்து குறுவள மையங்களில், 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, உடல் நலம், ஆரோக்கியம், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல் உள்ளடங்கிய கல்வி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், 10 ஒன்றியங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.

    கிருஷ்ணகிரி ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை குறுவளமைய மேற்பார்வையாளர் அசோக், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு பயிற்றுனர் அருண்குமார், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், உள்ளடங்கிய கல்வி, தேர்வு சலுகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.

    இந்த பயிற்சியில், மனநலம், உடல் நலம், ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மாணவர்கள் கற்றல் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். ஆப் மூலமாக 23 கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் நலனில் அக்கரை செலுத்தி குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் சரியான நேரத்தில் உறங்க வேண்டும். அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்கூடாது.

    பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். பூச்சி கொல்லி பயன்படுத்திய பழங்கள், காய்கறிகளை தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம், மன நலம், ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே சக மாணர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளி வகுப்பறை சூழலில் நன்றாக படித்து சாதனையாளராக முடியும் என்று அறிவுத்தப்பட்டது.

    Next Story
    ×