என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ரூ.19.80 லட்சம் மதிப்பில் பழுதடைந்தசாலைகள் சீரமைக்கும் பணி
    X

    பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரியில் ரூ.19.80 லட்சம் மதிப்பில் பழுதடைந்தசாலைகள் சீரமைக்கும் பணி

    • ரூ.19.80 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளின் முக்கிய சாலைகள் குண்டு குழியுமாக இருந்தது. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, 1வது வார்டு முதல் 16 வது வார்டு வரை ரூ.9.90 லட்சம் மற்றும், 16 முதல் 33வது வார்டு வரை ரூ.9.90 லட்சம் என மொத்தம் ரூ.19.80 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள குண்டு குழியுமான சாலை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு களிலும் மழைக்காலம் தொடங்கு வதற்குள், பழுத டைந்த அனைத்து சாலை களும் சரி செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், துணை மாவட்ட செயலாளர் சாவித்திரி கடலரசமூர்த்தி, நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயிஷா முகமதுஜான், சுதா சந்தோஷ் குமார், ஜெயக்குமார், பாலாஜி, மதன்ராஜ், நகராட்சி இள நிலை உதவியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×