என் மலர்
கரூர்
- கோழிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மர்மநபர்கள் 2 பேர் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்
கரூர்:
கரூர் புகழூர் காகித ஆலை- புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்தியின் தந்தை சுப்பிரமணி தோட்டத்தில் கட்டில் போட்டு உறங்கி கொண்டிருந்தார். கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மர்மநபர்கள் 2 பேர் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோழிகளை திருடியது வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த சூர்யா (19), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (18) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிமிருந்த கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்மமாக இறந்தன.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எல்லப்பநாயக்கன்புதுார் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. விவசாயியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் சாமி என்பவரது தோட்டத்துக்கு அருகே மேய்ச்சலுக்கு சென்ற ராஜேஸ்வரிக்கு சொந்தமான 18 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
கரூர்:
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்புற பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கரூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 31) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேலாயுதம்பாளையத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷகேம் நடைபெற்றது
- தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடு துறை மாதேஸ்வரி அம்பிகை உட னுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள லிங்கத்தூரைச் சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 39). இளநீர் வியாபாரி. கடந்த சில ஆண்டுகளாக இளநீர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முருகானந்தம் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் உறவினர்கள் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகானந்தம் இறந்தார். இதுகுறித்து உறவினர்கள் புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
- இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார்.
கரூர்,
கரூர் வடக்கு காந்திகிராமம் காலனியை சேர்ந்தவர் சுரேஷன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் கரூர் ெரயில்வே ஸ்டேஷன் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் (28) இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இரு சக்கர வாகனத்தை மீட்டு போலீசார் அவரை கைது செய்தனர்.
- கரூர் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
கரூர்,
கரூர்-திண்டுக்கல் சாலை மணவாடி பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கருர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 64) என்பவர் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த முதியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவருக்கு கஞ்சா எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெண்ணிடம் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
- இது குறித்து காமாட்சி தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார்.
கரூர்,
கரூர் தான்தோன்றிமலை கடைத்தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது37). இவருடைய கணவர் ராமு பெட்டி கடை முன் பொருட்கள் வாங்க நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (19), நவீன் (19), லோகேஷ் (22) ஆகிய 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து ராமு மீது மோதியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்ற 3 பேரும் மது போதையில் காமாட்சி வீட்டில் புகுந்து தகராறில் ஈடுபட்டதோடு, தட்டி கேட்ட காமாட்சியை கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்து காமாட்சி தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி தாக்குதல் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- நகை திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
- பின்னர் சத்தியசீலனை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
கரூர்,
கரூர் காளியப்பன்னுாரை சேர்ந்த பழனிசாமி (வயது39) என்பவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். செயின் உட்பட தங்க நகைகளை தனது கடைக்கு எடுத்து வந்தார். கடையில் வைத்து விட்டு வியாபாரத்தை மேற்கொண்டுள்ளார். சிறது நேரம் கழித்து பார்த்த போது நகைகளை காணவில்லை. இதையடுத்து கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சத்தியசீலன் (28) என்பவர் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் சத்தியசீலனை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
- கீழப்பழுவூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யபட்டார்
- தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது40). இவரது மனைவி ஜெயசித்ரா (32). இவரது மீது சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டு ஜெயசித்ராவை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
- ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ‘கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
- ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்களின் கருத்து கணிப்பில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 'கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதாவது ஜனதா தளம் (எஸ்) கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். அதனால் கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.
இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி தேர்தல் முடிவடைந்ததும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவர் கடந்த 6 மாதங்களாக ஓய்வின்றி தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பெங்களூருவில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். நாளை (சனிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே குமாரசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் தனது தனி உதவியாளர் மற்றும் சில நண்பர்களுடன் குமாரசாமி சிங்கப்பூர் சென்று இருப்பதாகவும், அங்கு இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை (சனிக்கிழமை) காலை பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் குமாரசாமி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
- நிலக்கடலை ரூ.3¾ லட்சத்துக்கு ஏலம் போனது
கரூர்:
கரூர் நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 52.27 குவிண்டால் எடை கொண்ட 167 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் நிலக்கடலை கிலோ அதிகபட்ச விலையாக ரூ.80.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.30-க்கும், சராசரி விலையாக ரூ.77.60-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 325-க்கு ஏலம்போனது.






