என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    17-ந்தேதி கேரளா நம்பூதிரிகளை வரவழைத்து தேவபிரசன்னம் பார்க்க ஏற்பாடு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக் காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம் அதேபோல மாலை 4 மணிக்கு திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தைஅமாவாசை, திருக்கார்த் திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியைமீண்டும் தொடங்கஇந்துஅறநிலைய த்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதற்கிடையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலைய துறைஅமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அஸ்தி வரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க லாமா? என்பது குறித்து வருகிற 17-ந்தேதி கேரளா வில் இருந்து நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கானஏற்பாடுகளை குமரிமாவட்டதிருக்கோவில்களின் இணைஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழுதலைவர் பிரபாராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ் வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • கல்வி நிறுவனங்களின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் வழங்கினார்
    • மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டி யாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றனர். இப்போட்டிகளில் குமரி மாவட்ட அளவில் 102 பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வின்ஸ் பள்ளி மாணவர்கள் ரிஷிக், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன், தலைவர் ஜான், பொருளாளர் நவீன், பால்பின், ஷீலன், பிபின், அனீஸ், சஜின் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்
    • 85 கிலோ எடை பிரிவில் கண்ணன் 2-வது இடத்தை பிடித்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே தாமரைக்குட்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). உடற்கல்வி பயிற்சியாளர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். 9.5 டன் எடை கொண்ட லாரியை கயிற்றால் கட்டி இழுத்தது. காரை தூக்கி சென்றது உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்திருந்தார்.

    பஞ்சாப்பில் நடந்த உலக இரும்பு மனிதன் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதல் 85 கிலோ எடை பிரிவில் கண்ணன் 2-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி ஸ்பெயினில் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதில் அகில இந்திய அளவில் கண்ணன் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

    நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்லேண்ட் கிராஸ், லாக்பிரஸ், பார்மர்ஸ் வாக், ஒன் ஆர்ம் டம்பிள் பிரஸ், ஏ பால் டூ ஷோல்டர் ஆகியவற்றில் பயிற்சி செய்து சாதனை படைத் தார்.

    இந்த நிகழ்ச்சியை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ணவர் மற்றும் உறவி னர்கள் பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புதுக் கிராமத்தைசேர்ந்த மீனவர் சகாய ஜாண்சன். இவரு டைய மனைவி ஆன்றோ டெல்பின் கோல்டா (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ள னர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரை கணவர் மற்றும் உறவி னர்கள் பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து கன்னியாகுமரி போலீசில் சகாய ஜான்சன் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • 04.09.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அரசாணை எண்:118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனுமதியற்ற மனைப் பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட் டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவு களை வரன்முறைப்படுத்த. ஏற்க னவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பி டப்பட்ட 2017 -ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லா மல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 04.09.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அரசாணை எண்:118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புப வர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படு கின்றது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ் வாறு செய்திகுறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா வழங்கினார்
    • அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோட் புக், பென்சில் பாக்ஸ் மற்றும் உபகரணங்கள் வழங்கினார்

    இரணியல் :

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலக்குளத்தில் நடந்து.

    தலக்குளம் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலக்குளம் தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் புலிமுகத்தையன்பிள்ளை, ஆண்றனி, மாஸ்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசி வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பிஎஸ்பி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோட் புக், பென்சில் பாக்ஸ் மற்றும் உபகரணங்கள் வழங்கினார். முன்னதாக கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலக்குளம் ஊராட்சி நிர்வாகிகள் அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.

    • மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
    • ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும்

    குளச்சல் :

    குளச்சல் நகர தி.மு.க.வாக்குச்சாவடி பாகமுகவர் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை குளச்சலில் நடந்தது. நகர செயலாளர் நாகூர் கான் தலைமை வகித்தார். குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    குளச்சலில் முதலில் பாக முகவர் ஆய்வை தொடங்கி இருக்கிறோம். ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது. எதையும் செய்ய பாரதிய ஜனதா அரசு தயாராக உள்ளது. இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து நாட்டின் பெயரை மாற்ற துடிக்கிறார்கள். இந்தியாவை எல்லா விதத்திலேயும் வளர்ச்சியில் மாற்றி காட்டுவேன் என கூறிய பிரதமர் பெயரை மாற்றிவிட்டார். 39 எம்.பி.க்களைக் கொண்டு இந்தியாவில் 3-வது கட்சியாக தி.மு.க உள்ளது. அந்தக் கட்சிக்கு கவர்னர் பல இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் புரிந்து கொண்டு கழக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் குளச்சல் நகர் மன்ற துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள், மாவட்ட மீனவரணி தலைவர் ஆன்றனிராஜ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆகஸ்டு 2018 வரை எஸ்.சி.வி. டி. சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும். அகில இந்திய தொழிற்தேர் வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. முதல் 3 வகைகளில் தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள். திறன்மிகு தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள். ஆகஸ்டு 2018 வரை எஸ்.சி.வி. டி. சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் 4-வது வகையில் பிற விண்ணப்பதாரர்க ளுக்கு 18.9.2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

    தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பத்தாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகு தியை பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு முதனிலைத்தேர்வுகள் கருத்தியல் பாட தேர்வு 10.10.2023 மற்றும் செய்முறை தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள அர சினர் தொழிற்ப யிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் சுலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறு பவர்கள் ஜூலை 2024-ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவற்றை

    www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதி விறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான கட்ட ணத்தை (ரூ.200) karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியா கவோ அல்லது தமிழக அர சின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ இ-செல்லான் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் இ-செல் லாள், கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றுடன் 19-த் தேதிக்குள் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களை கோணத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத் திலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலை பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ம்பவத்தன்று எட்வின் ஜோர்ஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார்.
    • பல இடத்தில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்

    களியக்காவிளை :

    குழித்துறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜோர்ஜ் (வயது 60). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல இடத்தில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.சம்பவத்தன்று எட்வின் ஜோர்ஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார்.

    சிறிது நேரத்தில் மனைவி வீட்டுக்கு வந்த போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப் பட்டார். இதனை பார்த்து மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தி னர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் எட்வின் ஜோர்ஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எட்வின் ஜோர்ஜ் சிகிச்சை பலனின்றி உயிழிழந்தார். மேலும் இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
    • தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை யாரோ திருடிச் சென்றனர். மேலும் அங்குள்ள புவனேஸ்வரி அம்மன் சன்னதியில் உள்ள கதவும் திறந்து கிடந்தது. அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.

    இது தவிர அங்குள்ள வேல் மண்டபத்தில் இருந்த வேலை திருடுவதற்காக வளைத்து இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வேலை திருட முடியாததால் அதை அந்த மர்ம நபர் விட்டுச் சென்று உள்ளார். யாரோ மர்மநபர் கோவிலின் பின்பக்கம் உள்ள சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இந்த கைவரிசையை காட்டியது தெரியவந்தது.உடனே இது பற்றி கோவில் பூசாரி சத்தியசீலன் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து கோவில் நிர்வா கத்தினர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணைநடத்தினார்கள்.

    அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த மர்ம நபரை அடை யாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.

    மேலும் தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். இது தவிர போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கோவிலில் மோப்பம் பிடித்துவிட்டு நான்கு வழி சாலை வரை ஓடி நின்றது. ஆனால் அந்த போலீஸ் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையில் இந்த கோவிலில் கொள்ளை அடித்த மர்ம நபரை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 போலீசார் கொண்ட தனிப்ப டையைஅமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி போலீஸ் படையை நியமித்து கன்னி யாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் உத்தர விட்டு உள்ளார்.

    • முக்கடல் அணை நீர்மட்டம் உயரவில்லை
    • திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரியில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் மாவட்ட முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    கோழி போர்விளை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 24.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, நாகர்கோவில், சுருளோடு, தக்கலை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மலையோரப் பகுதியான பாலமோர், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.11 அடியாக இருந்தது. அணைக்கு 513 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 166 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 5.2, பெருஞ்சாணி 8.6, சிற்றார்1- 7, சிற்றார்2-8.2, பூதப்பாண்டி 11.4, களியல்-4, கன்னிமார் 1.6, குழித்துறை 9.6, நாகர்கோவில் 1, சுருளோடு 12.6, தக்கலை 7, இரணியல் 4.3, பாலமோர் 10.4, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 10.4, கோழிப்போர்விளை 24.5, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 3.

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தாலும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக நீடித்து வருகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்க வில்லை.

    தொடர்ந்து மைனஸ் அடியிலேயே இருந்து வருகிறது. முக்கடல் நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 10.90 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைவாகவே உள்ள நிலையில் நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன்அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள்.

    • அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறா
    • 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

    குளச்சல் :

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53).

    இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். ஜூலை மாதம் 8-ந்தேதி இரவு கோபால கிருஷ்ணன் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீடு அருகே பாதையில் செல்லும்போது அங்கு இருளில் பதுங்கி யிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.

    ஆனால் ேகாபால கிருஷ்ணன் பணப்பையை இறுக பற்றிக் கொண்டதால், மர்மநபர் ஏமாற்றத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் கோபால கிருஷ்ணனுக்கு வலது கைவிரல் துண்டானது.

    இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை வெட்டியதாக மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருண் சஜு (30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர் டுத்தப்பட்டு நாகர் கோவில் சிறையில் அடைக் கப்பட்டார்.

    இந்த நிலையில் அருண் சஜுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார். இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, அருண் சஜு மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய் தார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×