என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் 2 குழந்தைகளின் தாய் மாயம் - போலீசில் கணவர் புகார்
- ணவர் மற்றும் உறவி னர்கள் பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி புதுக் கிராமத்தைசேர்ந்த மீனவர் சகாய ஜாண்சன். இவரு டைய மனைவி ஆன்றோ டெல்பின் கோல்டா (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ள னர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரை கணவர் மற்றும் உறவி னர்கள் பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து கன்னியாகுமரி போலீசில் சகாய ஜான்சன் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
Next Story






