search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி. முருகன்குன்றம் கோவிலில் திருட்டு - கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
    X

    குமரி. முருகன்குன்றம் கோவிலில் திருட்டு - கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

    • அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
    • தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை யாரோ திருடிச் சென்றனர். மேலும் அங்குள்ள புவனேஸ்வரி அம்மன் சன்னதியில் உள்ள கதவும் திறந்து கிடந்தது. அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.

    இது தவிர அங்குள்ள வேல் மண்டபத்தில் இருந்த வேலை திருடுவதற்காக வளைத்து இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வேலை திருட முடியாததால் அதை அந்த மர்ம நபர் விட்டுச் சென்று உள்ளார். யாரோ மர்மநபர் கோவிலின் பின்பக்கம் உள்ள சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இந்த கைவரிசையை காட்டியது தெரியவந்தது.உடனே இது பற்றி கோவில் பூசாரி சத்தியசீலன் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து கோவில் நிர்வா கத்தினர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணைநடத்தினார்கள்.

    அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த மர்ம நபரை அடை யாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.

    மேலும் தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். இது தவிர போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கோவிலில் மோப்பம் பிடித்துவிட்டு நான்கு வழி சாலை வரை ஓடி நின்றது. ஆனால் அந்த போலீஸ் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையில் இந்த கோவிலில் கொள்ளை அடித்த மர்ம நபரை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 போலீசார் கொண்ட தனிப்ப டையைஅமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி போலீஸ் படையை நியமித்து கன்னி யாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் உத்தர விட்டு உள்ளார்.

    Next Story
    ×