என் மலர்
கன்னியாகுமரி
- 28-ந்தேதி நடக்கிறது
- ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா, தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் கார்த்திகை சிறப்பு திருவிழா ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.
28-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நியமித்து பணிவிடை யும், காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அய்யாவைகுண்ட சாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழாவும் நடக்கிறது. 29-ந்தேதி தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு மிருத்தியஞ்சய ஹோமமும், 9.30 மணிக்கு பிம்பம் சுத்தம் செய்யும் பூஜையும் நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு பகவதி பூஜையும், 6.30 மணிக்கு சுதர்சன ஹோமமும், சுமங்கலி பூஜையும் நடக்கிறது. 30-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு அய்யா நிழல் தாங்கலில் இருந்து அபிஷேக தீர்த்தம் ஊர்வல மாக ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு தீபாராத னையும் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 31-ந் தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 41 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. டிசம்பர் மாதம் 10-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நிய மித்தல் பணிவிடை நடக்கிறது. 11 மணிக்கு அய்யா வுக்கு பணிவிடையும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் 1 மணிக்கு பால் தர்மமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் 6.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு உகப்ப டிப்பும் 8 மணிக்கு அன்னதர்ம மும் நடக்கிறது.
மறுநாள் 12-ந்தேதி ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு கொடை விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதலும் 6 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாரதனையும் 6.30 மணிக்கு அம்மன் கடல் நீராடி வருதலும் நடக்கிறது. காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும் 9 மணிக்கு நாரா யண சுவாமிக்கு சிறப்பு பூஜையும் 10 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 11-45 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜையும் பகல் 12 மணிக்கு மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் முத்தாரம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1 மணிக்கு சமபந்தி விருந்தும் பிற்பகல் 2-30 மணிக்கு செங்கிடாகாரசாமி, வெள் ளைக்கார சாமி, கருங்கிடகார சாமிகளுக்கு சிறப்பு அலங்காரபூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் 6 மணிக்கு மாசானசாமி மற்றும் சுடலை மாடசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இனிப்பு வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.
- குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
தென்தாமரைகுளம்:
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்குட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவில் நவராத்திரி விழாகடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடைசி நாளானநேற்று விஜயதசமியை முன்னிட்டு ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை விவேகானந்தா கல்லூரியின்முன்னாள் தமிழ் துறை தலைவர் மரிய ஜூலியட் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுமார் 20 குழந்தைகள் கலந்து கொண்டனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் கே.எஸ்.மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்:
தெரிசனங்கோப்பு கவுசிகா பள்ளியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகிய பாண்டியபுரம் ஜெயந்தீஸ்வர உடைய நயினார் கோவில் மேல்சாந்தி ஜெய்ஸ்ரீ மணிகண்ட ஆச்சார்யார் தலைமையில் குழந்தைகள் அனைவரும் நலம்பெற ஆகம விதிப்படி அதற்கான அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டு, சிவ ஆகமரத்தினம் ஜெய்ஸ்ரீ நாராயண சுவாமி தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ப்ரி.கே.ஜி.வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஹிந்தி மற்றும் செஸ் வகுப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுசிகா பள்ளியின் தாளாளர் செண்பகநாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- மர்ம நபர்கள் அட்டகாசம்
- திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இரணியல்:
இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் சேவியர் ராஜ் (வயது 69). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆலன்விளை பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வாழை தோட்டத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரது தோட்டத்திலும், பக்கத்து தோட்டத்திலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஜாண் சேவியர் ராஜ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை கள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.
- தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணை களுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளவான 25 அடியை எட்டி உள்ளது. இதேபோல் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.
48 அடி ெகாள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.26 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 70.90 அடியாக உள்ளது.அணைக்கு விநாடிக்கு 445 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப் பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதால் ரத்து.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வழிபட்டனர்
- மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் பரிவேட்டை நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் தேங்காய், பழம் படைத்து சுருள் வைத்தும் வழிபட்டனர்.
விவேகானந்தபுரம் சந்திப்பில் ஊர்வலம் வந்த போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா சார்பில் பகவதி அம்மனுக்கு, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் மற்றும் கேந்திர ஆயுட்கால ஊழியர்கள், கேந்திர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு ஆயுர்வேத கல்லூரியின் லேப்-டெக்னீசியன் சிறையில் அடைப்பு
- தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டா ரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவ படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இதுபோக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 35 வயதான பெண் டாக்டர் ஒருவருக்கு, ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) என்பவா் தொல்லை கொடுத்தார். மேலும் அவர், தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.
இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படிக்கும் மேலும் 2 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. அதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனத்துக்கு ஆன்லைன் மூலமாக தனித் தனியாக 2 புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுக்களில், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (வயது 35) என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் புகார் மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், "கைதான வைரவன் மீது 2 மருத்துவ மாணவிகள் புகார் அளித்துள்ளனர். தங்களை பாலியல் ரீதியாக உரசியதாக புகாரில் கூறியி ருக்கிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் வைரவன் 2 மாணவிகளுக்கும் பாலி யல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட் டுள்ளார்" என்றனர்.
இதனையடுத்து கைதான வைரவனை போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைரவன் நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வைரவனுக்கு நாளை மறுநாள் (27-ந்தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒரு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள் ளையை போலீசார் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொழிலாளி கைது
- அடிக்கடி மது அருந்திவிட்டு சுமனையும், சுமனின் தாயாரையும் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி புதுகாட்டு விளையை சேர்ந்தவர் சுமன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவரது வீட்டருகில் வசித்து வருபவர் சிம்சன். இவரது மகன் அபின் (27). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு சுமனையும், சுமனின் தாயாரையும் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சவாரிக்கு சென்று விட்டு சுமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அபின் இரவு எங்கு சென்று வருகிறாய் என கேட்டு சுமனை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை சுமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பால்மணி, அபின் தந்தை சிம்சன், தாயார் முத்துபாய் ஆகியோர் சேர்ந்து சுமனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அபின், பால்மணி இருவரும் சுமனை கம்பியால் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுமன் சத்தம் போடவே கொலை மிரட்டல் விடுத்து விட்டு 4 பேரும் தப்பிச்சென்று விட்டனர். காயமடைந்த சுமன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சுமன் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 டெம்போக்கள் பறிமுதல்
- மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர்.
குளச்சல்:
மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான வெட்டுமடை பகுதியில் அனுமதியின்றி கனிம வளம் மண்கள் திருடி செல்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று மணல் ஆலை மேற்பார்வையாளர் சிவசங்கர் (வயது 50) மற்றும் ஊழியர்களுடன் வெட்டு மடை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றார். அப்போது 3 டெம்போக்களில் ஒரு ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
இவர்களை பார்த்ததும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர். இதுகுறித்து சிவசங்கர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் ஜே.சி.பி. டிரைவர் காரங்காடு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.
- நாளை தொடக்கம்
- 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.
2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. வட்டார அளவில் இப் போட்டிகள் கடந்த 18.10.2023 தொடங்கியது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.
இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் கோரிக்கை
- மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கருங்கல்:
கருங்கல் பேரூ ராட்சிக்குட்பட்டது தெரு வுக்கடை. இங்குள்ள பொட்டக்குழி சாலையில் தெருவுக்கடையில் இருந்து சாலை மிகவும் மோசமாக உள்ளது. சி.எஸ்.ஐ. சர்ச் வரை சாலை குண்டும் குழிகளும் நிறைந்து உள்ளது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுமட்டுமல்லாது மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொது மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பல வருடங்களாகவே இச் சாலையில் மக்கள் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
இதனை சீரமைக்க வலி யுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து இந்த சாலையை சீர்செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






