என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி செல்வி(வயது30). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 3-வதாக 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இவர் சூளாங்குறிச்சி, மணிமுக்தா அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தார். அதில், கருவில் உள்ள குழந்தை வளர்ச்சி குறைபாடுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் செல்வி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். கீழ்பாடியில் மருந்து கடை வைத்துள்ள முத்துகுமாரி(40) என்பவர் கருக்கலைப்பு செய்வதாகக் கூறி, செல்வியை மெடிக்கல் ஸ்டோருக்கு அழைத்துச் சென்று, கருக்கலைப்பு செய்துள்ளார். அவருக்கு உதவியாக கவிதா(35) என்பவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு செல்வி இறந்தார். இது குறித்த புகாரின்படி, ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துகுமாரி, கவிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி செல்வி(வயது 30). சின்னதம்பி பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வி 5 மாத கர்ப்பமாக இருந்தார். சில வாரங்களுக்கு முன் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அதில், கருவில் உள்ள குழந்தை வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, கருக்கலைப்பு செய்வதற்காக தியாகதுருகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு 8,000 ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளனர்.
இதனையறிந்த, கீழ்பாடியில் மருந்து கடை வைத்துள்ள முத்துக்குமாரி என்பவர் கருக்கலைப்பு செய்வதாகக் கூறி செல்வியை மருந்து கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, முத்துக்குமாரி மற்றும் அருண் மனைவி கவிதா ஆகியோர் செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனால், செல்விக்கு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதுடன், சுயநினைவு இழந்தார். உடன், அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே செல்வி இறந்தார்.
தகவல் அறிந்த ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி மற்றும் சுகாதாரத்துறையினர் கீழ்பாடி கிராமத்தில் விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி முத்துக்குமாரி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தைச் சேர்ந்த அருண், அவரது மனைவி கவிதா ஆகிய 3 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-
விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் இளம்பயிரில் சராசரியாக 20 முதல் 35 சதவீதமும் வளர்ந்த பயிரில் 25 முதல் 35 சதவீதமும், இளம் கதிர் மற்றும் கதிர் முற்றும் பருவத்தில் 10 முதல் 20 சதவீதமும் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை கட்டுப்படுத்த கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலும் விதை நேர்த்தி செய்து விதைகளை விதைப்பதன் மூலமும் இப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
விதை நேர்த்தி மருந்து களான சயன்ட்ரனி லிப்ரோல் 19.8 சதவீதம் மற்றும் தையோமெத்தாக்சம் 19.8 சதவீதம் என்ற மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. விதை நேர்த்தி செய்து விதைத்தல் வேண்டும்.
வரப்பு மற்றும் ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயறு மற்றும் எள் போன்றவைகளை நடவு செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் படைப்புழுவின் தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம். மேலும் இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 4 எண்கள் என்ற அளவில் அமைத்து படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கண்காணித்து அழிக்கலாம்.
இளம் பயிரில் 1500 பி.பி.எம். அசாடிராக்டின் 1 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இந்த புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் கீழ்காணும் ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
15 முதல் 20 நாட்கள் விதைத்த பின்னர் தாக்குதல் காணப்படின் குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சத திரவம் 440 முதல் 45 நாட்களில்தாக்குதல் காணப்பட்டால் இமாமெக்டின் பென்சோயேட் 5 ஷிநி 4 கிராம், மேலும் தேவைப்பட்டால் 3-வது முறையாக கதிர்பிடிக்கும் பருவத்தில் ஸ்பைனிடோரம் 17.7 சத திரவம் 5 மி.லி. என்ற அளவில் கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் குருத்து பகுதியில் நன்கு படும்படி தெளித்தும், இப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 9 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட 3வது வார்டு வேட்பாளர் இம்தியாஸ், 10-வது வார்டு சாபிரூன்நிஷா, 12-வது வார்டு சுதா, 13-வது வார்டு ரோஜாமணி ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 11 வார்டுகளில் தி.மு.க., அ.திமு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மற்றும் பல கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 43 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 7 ஆயிரத்து 549 வாக்குள் பதிவானது. இதில் 1-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் சுயேச்சை என 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த வார்டில் மொத்தமுள்ள 634 வாக்குகளில் 513 வாக்குகள் பதிவானது. இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வடக்கனந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளில் கடந்த 19 -ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 1,17,551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் தியாக துருகம் பேரூராட்சி வாக்குகள் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னசேலம் மற்றும் வடக்கநந்தல் பேரூராட்சி வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே மேலூர் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி, திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் மணலூர்பேட்டை பேரூராட்சி வாக்குகள் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி வாக்குகள் 8 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும், திருக்கோவிலூர் நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 9சுற்றுகளாகவும், உளுந்தூர்பேட்டை நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், வடக்கனந்தல் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 4 சுற்றுகளாகவும், சங்கராபுரம் பேரூராட்சி வாக்குகள் 4 மேஜைகளில் 3 சுற்றுகளாகவும், தியாகதுருகம் பேரூராட்சி வாக்குகள் 2 மேஜைகளில் 10 சுற்றுகளாகவும், சின்ன சேலம் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும், மணலூர் பேட்டை பேரூராட்சி வாக்குகள் 2 சுற்றுகள் எண்ணப்படுகிறது.
ஆக மொத்தம் 185 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 28 மேஜைகளில் 54 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் நாளை மதியத்திற்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் சத்தார். அவரது மகன் முகம்மது இஸ்மாயில் (வயது28). ஆட்டோ மொபைல் மெக்கானிக். இவர் சம்பவத்தன்று நண்பர்கள் 6 பேருடன் கல்வராயன் மலையை சுற்றிப்பார்க்க சென்றார்.
அப்போது சங்கராபுரம் அருகே உள்ள கொடியனூர் மலை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் அவர்கள் குளித்தனர். இதில் முகமது இஸ்மாயில் பாறையில் கால் வழுக்கியதால் தவறி கீழே தண்ணீர் தேங்கிய பகுதியில் விழுந்து நீரில் மூழ்கினார். நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீ யணைப்பு துறையினர் தேடினர்.
அப்போது நீர் வீழ்ச்சியில் முகமது இஸ்மாயில் உடலை தேடி கண்டுபிடித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 வார்டுகளில் 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வார்டு எண் 2 -ல் அமைந்துள்ள வ.உ.சி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு முதல் நபராக சென்று வாக்கு செலுத்தினார்.
முன்னதாக வாக்குச்சாவடி மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டதா, எத்தனை வேட்பாளர்கள் இந்த வார்டில் போட்டியிடுகிறார்கள், மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இதுவரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவுக்கு முன்பாக சீல் வைப்பதை பார்வையிட்டார். அப்போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் உள்ளது. இதில் 72 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 278 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல் தியாகதுருகம், சங்கராபுரம், மணலூர்பேட்டை, சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகள் உள்ளது. இதில் 81 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 69 வார்டுகளில் 244 பேர் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி 5 பேரூராட்சிகளில் 141 வார்டுகளுக்கு 522 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு லட்சத்து 71,841 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் 185 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க வந்தனர்.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான காய்ச்சல் பரிசோதனை செய்தல் கிருமி நாசினிகள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த பாதுகாப்பு உடைகளுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கோவிந்த சாமி புரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் தியாகதுருகம் அருகே அடரி கிராமத்தில் தங்கியிருந்தார்.
அந்த சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்த தாத்தா அம்சவேல் நான் தெருவில் விளையாடி கொண்டிருந்தபோது பாலியல் தொந்தரவு செய்தார். இதனை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன தாய் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் வடதொரசலூர், கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த அம்சவேல் (வயது 60) என்பவரை போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.






