என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிதிசார் கல்வி முகாம்
புதுப்பாலப்பட்டில் நிதிசார் கல்வி முகாம்
அரசம்பட்டு கிளை தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிளை தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு உதவி மேலாளர் பாண்டிராஜ் தலைமை தாங்கினார். காசாளர் வெங்கட்ரமணா முன்னிலை வகித்தார். வங்கி உதவியாளர் செந்தில்முருகன் வரவேற்றார். வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் வங்கி சேவை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது குறித்தும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவது, சுயதொழில் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வணிக தொடர்பாளர்கள் ஜவகர்,ஜெயக்குமார, கற்பகம் நகை மதிப்பீட்டாளர் குமார் மற்றும் மகளிர் சுய உதவி் குழுவினர்கள் கலந்து கொண்டனர் புதுப்பாலப்பட்டு மகளிர் திட்ட அலுவலர் ஷோபா நன்றி கூறினார்.
Next Story






