என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை நடந்த போது எடுத்த படம்
வடக்கநந்தல் பேரூராட்சி திமுக கைப்பற்றி வெற்றி வாகை சூடியது
வடக்கனந்தல் பேரூராட்சியில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது பேரூராட்சி மொத்த வார்டுகள் 18 இதில்7 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சின்னசேலம்:
வடக்கனந்தல் பேரூராட்சியில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது பேரூராட்சி மொத்த வார்டுகள் 18 இதில்7 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மீதமுள்ள 11 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது 11 ஆயிரத்து 338 வாக்காளர்களை கொண்டது. 8 ஆயிரத்து 856 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர் 78.11 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது வாக்களித்த மின்னணு வாக்கு பெட்டி இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான சின்னசேலம் அடுத்த மேலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது. இதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் காலை 8 மணிக்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து வார்டு வாரியாக எண்ணப்பட்டது. இந்த நிலையில் வடக்கநந்தல் பேரூராட்சி 18 வார்டுகளில் 5-வது வார்டு பாலு, 6-வது வார்டு பெரியம்மாள், 8-வது வார்டு பன்னீர்செல்வம், 15-வது வார்டு அஞ்சுகம் 16-வது வார்டு புஷ்பராணி 17-வது வார்டு மகேந்திரன் 18-வது வார்டு சத்யா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது போக மீதமுள்ள 11 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், சுயேச்சை உள்ளிட்ட 34 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 11 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களின் விபரம் வருமாறு,; வார்டு எண்-1 திமுக பழனியாப்பிள்ளை 551 , வார்டு எண்- 2 திமுக விருத்ததாம்பு 617, வார்டு எண்- 3 திமுக கோபாலகிருஷ்ணன் 473 வார்டு எண் 4 திமுக ரம்யா362 , வார்டு எண் 7, திமுக இலக்கியா 482, வார்டு எண் 9 திமுக பெரியம்மாள்559, வார்டு எண் 10 திமுக தண்டபாணி 513, வார்டு எண்11 திமுக ராமு 373 , வார்டு எண் 12 திமுக முகேஷ் 502, வார்டு எண் 13 திமுக செங்கமலம் 492 வார்டு எண் 14 திமுக பெரியம்மாள் 444 வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
Next Story






