என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கருக்கலைப்பில் பெண் பலியான விவகாரத்தில் 2 பேர் கைது

    ரிஷிவந்தியம் அருகே கருக்கலைப்பில் பெண் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி செல்வி(வயது30). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 3-வதாக 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

    இவர் சூளாங்குறிச்சி, மணிமுக்தா அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தார். அதில், கருவில் உள்ள குழந்தை வளர்ச்சி குறைபாடுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் செல்வி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். கீழ்பாடியில் மருந்து கடை வைத்துள்ள முத்துகுமாரி(40) என்பவர் கருக்கலைப்பு செய்வதாகக் கூறி, செல்வியை மெடிக்கல் ஸ்டோருக்கு அழைத்துச் சென்று, கருக்கலைப்பு செய்துள்ளார். அவருக்கு உதவியாக கவிதா(35) என்பவர் இருந்துள்ளார்.

    இந்நிலையில், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு செல்வி இறந்தார். இது குறித்த புகாரின்படி, ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துகுமாரி, கவிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×