என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி பெரும் கலவரம் மூண்டது. இந்த நிலையில், கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15ஆம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    இந்த விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    உளவுத்துறை எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த கலவரம் ஏற்பட்டதாக மாவட்ட காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, சிறப்பு காவல் ஆய்வாளர் மாவட்ட எஸ்.பி.யிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றாரா என்பன குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

    • மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • வரும் 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் பங்கேற்க கலவரக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக திரட்டப்பட்டு வந்ததாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    கலவரம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கள்ளக்குறிச்சியில் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

    வரும் 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது முதல் கடமை என்று போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேட்டி அளித்தார்.
    • மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது அவர் செய்தி யாளரிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி நடந்த இந்த சம்பவங்களை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீராக சரியான முறையில் பராமரிப்பது முதல் கடமை. மேலும் மற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை எப்போதும் போல் அமைதியான மாவட்டமாக எடுத்துச் செல்ல உள்ளேன். அதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும். என கூறினார். மாவட்ட காவல்துறை அமைதி ஏற்படுத்துவதை முதல் கடமையாக கொண்டுள்ளது. மேலும் அனைத்து குழுவினருக்கும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். தொடர்ந்து சி.பி.சி.ஜ.டி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். மேலும் உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய தேவையான நட வடிக்கைகளை மேற்கொ ள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இவர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சூப்பிரண்டாக கடலூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல் ஆகிய மா வட்டங்களில் பணியில் இரு ந்துள்ளார். சென்னையில் தியாகராய நகர், அடையார் பூக்கடை துணை கமிஷனர் ஆகிய பதவி வகித்துள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும் இருந்துள்ளார். கள்ள க்குறிச்சி மாவ ட்டத்தில் முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயச்சந்திரன் பொறு ப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து ஜுயாவுல் ஹக், செல்வகுமார் ஆகியோர் பணிபுரிந்து வந்த நிலையில் மாவட்டத்தின் 4-வது போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி சென்னை பத்திரப்பதிவுத்துறையில் உதவி ஐ.ஜி. யாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.
    • கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13- ந் தேதி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மூணாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 17- ந் தேதி பள்ளிக்கு முன்பு திரண்ட போரா ட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்து, அலுவலகங்கள், தளவாடப் பொருட்கள், மாணவர்கள் சான்றிதழ்கள் ஆகியவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பிரச்சனையை சரியாக கையாளாத கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    • திருநாவலூர் அருகே விவசாயி கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32) இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயகுமார் கடன் வாங்கினார். மேலும் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றார். சுயேட்சையாக நின்ற போதும் இவருக்கு கடன் ஏற்பட்டது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சுயேட்சை தேர்தலில் நின்றதற்கு செலவழிக்க பணத்திற்காக இவர் பல நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். . இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.

    கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் விஜயகுமாரை திட்டி உள்ளனர். இதனால் நேற்று விஜயகுமாரின் மனைவி இவருடன் சண்டை போட்டு விட்டு திருநாவலூர் காமராஜர் நகரில் உள்ள அ வரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றார் அதற்கு அவரது மனைவி வர மறுத்து விட்டார். கடன் பிரச்சினை யால் தவித்து வந்த விஜயகுமார் மனை வியுடனும் தகராறு ஏற்பட்டதனால் மன உளைச்சலில் இருந்தார். மேலும் மனைவியும் வர மறுத்து விட்டதால் உடனே மாமியார் வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டு தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மனைவி மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட சோகம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார்.
    • 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டார்.

    முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பள்ளியை மீட்கும் நடவடிக்கையாக புதிய ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சூறையாடப்பட்ட பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி காவல்துறை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
    • தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பை அடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். 

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • பெண்ணுக்கு அண்ணாமலைக்கு சொந்தமான நிலத்தை எழுதிக் கொடுப்பதாக சொல்லி இருந்தார்.
    • இந்த தகவல் அறிந்த அவருடைய மகன் அரவிந்த் தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 55). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். பெண்ணை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

    அந்தப் பெண்ணுக்கு அண்ணாமலைக்கு சொந்தமான நிலத்தை எழுதிக் கொடுப்பதாக சொல்லி இருந்தார். இந்த தகவல் அறிந்த அவருடைய மகன் அரவிந்த் (23) தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் மறுத்து விட்டு பெண்ணுக்கு தான் எழுதிக் கொடுப்பேன். நீ எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய். அதனால் உனக்கு நான் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.

    இதை மனதில் வைத்துக் கொண்ட அரவிந்த் நேற்று இரவு அண்ணாமலை தூங்கிக் கொண்டிருந்தபோது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.

    இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் திருநாவலூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பிணமாக கிடந்த அண்ணாமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்த அரவிந்தையும் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக கடந்த 17-ந் தேதி வன்முறை வெடித்தது.
    • சிதறிகிடக்கும் பொருட்கள், வன்முறையால் எரிக்கப்பட்ட பஸ்கள், ஆவணங்கள் குறித்து தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இவரது இறப்பு தொடர்பாக கடந்த 17-ந் தேதி வன்முறை வெடித்தது.

    இந்த கலவரத்தில் மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. அங்குள்ள பஸ்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே தடயவியல் துறையினர் துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் வன்முறை நடந்த பள்ளிக்கு இன்று மதியம் சென்றனர். அங்கு சிதறிகிடக்கும் பொருட்கள், வன்முறையால் எரிக்கப்பட்ட பஸ்கள், ஆவணங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

    இந்த ஆய்வின்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அதிரடி ஆய்வு நடந்து வருகிறது.

    • சின்னசேலம் கலவர கல்வீச்சில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
    • அலுவலகங்களில் இருந்த சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து நாசமானதை பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி இறப்பால் பள்ளியில் வன்முறை சம்பவம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மற்றும்தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர்கள் வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அலுவலகங்களில் இருந்த சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து நாசமானதை பார்வையிட்டனர். மேலும் அலுவலகம் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த கார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் ஆகியவை முற்றிலும் எறிந்து போனதையும், கட்டிடங்களுக்கு தீ வைத்துக் கொளுத்த ப்பட்டிருப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி தங்கி இருந்த 3-வது மாடியில் உள்ள அறையை பார்வையிட்டனர்.

    அங்கிருந்து எப்படி கீழே விழுந்திருப்பார், எங்கே விழுந்தார் என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதேபோல் பள்ளியில் சுவற்றில் ரத்தக்கறை உள்ளதாக சமூக வலைதலங்களில் கூறப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ. வேலு கேட்டறிந்தார். அதற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2019 இல் இருந்து இந்த கரை இருப்பதாக கூறினர். தொடர்ந்து ஆய்வு முடித்து விட்டு அமைச்சர்கள் புறப்பட்டபோது அங்கு வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அமைச்சரை சந்தித்து எங்கள் பிள்ளைகள் இதே பள்ளியில் படிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர் இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது கல்வீச்சில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினர். அப்போதுகாவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) தாமரைக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி வந்தனர்.

    அவர்கள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேர் கொண்ட குழுவாக சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யவந்துள்ள டாக்டர்கள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கலவரம் நடந்த இடம், சூறையாடப்பட்ட பள்ளிக்கு சென்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    • மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது.
    • கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி ஸ்ரீமதி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை பெற்றோர் ஏற்கவில்லை. தங்களது மகளின் சாவில் மர்மம் உள்ளது என கூறி உறவினர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் வன்முறையாக வெடித்தது. போராட்ட கும்பல் பள்ளிக்குள் புகுந்து வாகனங்களை சூறையாடி தீ வைத்தனர். இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகள் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழு அமைத்து உத்தரவிட்டார்.

    இந்த மருத்துவ குழுவில் தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் சாந்தகுமாரி தலைமையில் விழுப்புரம் டாக்டர் கீதாஞ்சலி, திருச்சி டாக்டர் ஜெயந்தி, சேலம் டாக்டர் கோகுலநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இதேபோல மருத்துவ குழுவினரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர்.

    இதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சந்தேகப்படும் நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×