என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சின்னசேலம் பள்ளியில் களவாடிய பொருட்களை மக்கள் வீசி சென்றனர்.
    • இன்னும் பல பொருள்கள் பொதுமக்கள் வீசி செல்வார்கள் என்பதால் காவல்துறை பொருட்களை தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மர்மமான முறையில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்தார். மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு சமூக அமைப்பினர் கடந்த 17-ந் தேதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. கலவரத்தை பயன்படுத்தி மாணவர்களும், பொது மக்களும் பள்ளி அலுவலத்திலும், வகுப்பறையிலும் உள்ள கையில் கிடைத்த பொருட்களை திருடி சென்றனர். பள்ளியிலே எடுத்துச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு காவல்துறை சார்பாகவும், தண்டோரா மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பொருட்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள் இரவில் சாலை ஓரத்திலும், ஏரி கரையிலும் வீசி சென்றனர். பின்னர் அந்தப் பொருள்களை போலீசார் மீட்டு பள்ளி வளாகம் அருகே ஒரு இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பொருள்கள் பொதுமக்கள் வீசி செல்வார்கள் என்பதால் காவல்துறை பொருட்களை தேடி வருகிறார்கள். 

    • சின்னசேலம் பள்ளியில் அனுமதி இன்றி விடுதி செயல்பட்டது தெரியவந்துள்ளது.
    • அனுமதி பெறாமல் விடுதி நடத்துவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் இறந்து போனார். இதுகுறித்து விசார ணைக்காக மாநில குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகிய 3 உறுப்பினர்களை கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகி யோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா

    ஆகியோரிடம் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை செய்தனர். விசாரணை முடிவுற்ற நிலை–யில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது ஆணைய தலைவர் கூறியதாவது, விசாரணை–யில் சம்பந்தப்பட்ட அதிகாரி–களின் செயல்பாடுகள் குறித்து அவர்களது துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட கலெக்டர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிப்பு கொடுத்திருந்தார். ஆனால் கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனுமதியின்றி விடுதி செயல்பட்டது தெரிய வந்தது. அவ்வாறு அனுமதி பெறாமல் விடுதி நடத்துவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும். விசாரணைக்கு அனை வரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் மாணவி ஸ்ரீமதிக்கு முதலில் மருத்து வம் பார்த்த மருத்துவர் பணி சுமையின் காரணமாக விசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து வருகிற 27- ந்தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விசாரணை நடைபெறும் எனக் கூறினார்

    • ஒரு குழுவினர் பள்ளியில் ஏற்பட்ட சேதம் மற்றும் தீயில் எரிந்த வாகன சேதங்களைக் கணக்கீடு செய்ய உள்ளனர்.
    • ஒரு குழுவினர் கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிய, கள்ளக்குறிச்சி சுற்றுப்பகுதியில் உள்ள டோல்கேட்டுகள் மற்றும் பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலுார் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலுாரை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மாணவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீயிட்டு, பள்ளியில் உள்ள பொருட்களை கலவரக்காரர்கள் சூறையாடினர்.

    கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பிரவீன்குமார் டி.ஐ.ஜி.அபிநவ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ராதா கிருஷ்ணன், கிங்கஷ்லின், முத்துமாணிக்கம், சந்திரமவுலி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவினர் உளுந்தூர்பேட்டை பாலியில் உள்ள சிறப்பு காவல் படை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டனர்.


    பின்னர் சக்தி மெட்ரிக் பள்ளியில், நேற்று மாலை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு, கலவரக்காரர்கள் சேதப்படுத்திய பள்ளி கட்டிடம், வகுப்பறைகள், தீயிட்டு கொளுத்தப்பட்ட பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை பார்வையிட்டனர்.

    அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டனர் இதில், ஒரு குழுவினர் பள்ளியில் ஏற்பட்ட சேதம் மற்றும் தீயில் எரிந்த வாகன சேதங்களைக் கணக்கீடு செய்ய உள்ளனர்.

    ஒரு குழுவினர் கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிய, கள்ளக்குறிச்சி சுற்றுப்பகுதியில் உள்ள டோல்கேட்டுகள் மற்றும் பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளனர். மற்றொரு குழுவினர் பள்ளியில் கலவரம் நடந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மொபைல் எண்களைக் கண்டறிய 'தம் டவர் ஆப்பரேட்' செய்து, விபரங்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

    முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கலவரக்காரர்களிடம் இருந்துள்ளது. இதற்காக, மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த கும்பல், வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முழு காரணம் பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான். பள்ளி தாளாளர் ரவிக்குமார், அதிக கடனில் இருந்துள்ளார். இதனால், கல்விக் கட்டணத்தை கறாராக வசூலித்துள்ளார்.

    எந்த அமைப்பாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் நன்கொடை தர மறுத்துள்ளார். இதனால், ரவிக்குமார் மீது பல்வேறு அமைப்புகளுக்கு கோபம் இருந்துள்ளது. பெற்றோரிடமும் ரவிக்குமார் கறாராக நடந்துள்ளார். தன் தாய் சிறிய அளவில் தொடங்கிய பள்ளியை, ரவிக்குமார் வங்கியில் கடன் பெற்று விரிவுபடுத்தியுள்ளார். அரசியல் கட்சியினரிடமும் ரவிக்குமார் பகையை சம்பாதித்து உள்ளார்.

    இப்படி பல்வேறு தரப்பினரிடையே ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்ததே, இந்த கலவரத்திற்கு காரணம் ஆகும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாணவி மரணம் குறித்த விசாரணையும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    • பணியில் சேரும்போது ஆசிரியர்கள் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம் வைத்திருந்தது.
    • கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. பள்ளிக்கட்டிடம் பற்றி எரிந்தது. இதில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளியின் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை சாம்பலாயின.

    இந்த கலவரத்தில் முக்கியமாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டச்சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இதுதொடர்பாக இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கூறும்போது, "பணியில் சேரும்போது எங்களது சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம் வைத்திருந்தது. நடந்த கலவரத்தில், எங்களது சான்றிதழ்களும் தீயில் கருகிவிட்டது. பள்ளி மூடப்பட்டுள்ள சூழலில் வேறு பள்ளியில் வேலை தேடலாம் என்றாலும், சான்றிதழ் இல்லாததால் தவித்து வருகிறோம்.

    கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம். தற்போதுதான் நிலைமை சற்று சரியானது. தற்போதுள்ள சூழலில் பள்ளி மீண்டும் இயங்குமா? என்பதுதெரியவில்லை. இந்த இக்கட்டான நிலையில், சான்றிதழ் இல்லாத எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

    இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அவரவர் சான்றிதழ்களின் நகல்கள் அடிப்படையில் புதிய சான்றிதழ்களை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுள்ளார்.
    • காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் நிருபர்களிடம் கூறுகையில் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் காவலரை நியமனம் செய்து குற்றங்கள் நடக்காமல் இருக்க பணியாற்றுவேன் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் கொடுக்கும் புகாரை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் கெடிலம் சேந்தநாடு களமருதூர் மடப்பட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன் என்று புதிய கலெக்டர் உறுதியளித்தார்.
    • மாணவி 3- வது மாடியில் இருந்து கீழே விழுந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மா வட்டத்தில் புதிய கலெக்டராக ஷ்ரவன்குமார் ஜடாவத் பெறுப்பேற்றார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி கள்ள க்குறிச்சி மாவ ட்டத்தின் 3-வது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கையுடன் பணி வழங்கிய முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். கடந்த ஒரு வாரத்தில் பள்ளி மாணவி இறப்பு குறித்து தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மற்றும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நியாயமான விசாரணை மேற்கொள்ள ப்பட்டு சட்டரீ தியான நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 3- வது ஆட்சியராக பொறுப்பேற்ற நான் பொது மக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக உள்ளேன்.

    மேலும் தமிழக அரசின் அனைத்து துறைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் முழு வீச்சில் வழங்க நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களுக்கு சிறிய வேண்டுகோள் தற்போது உள்ள சூழ்நிலையில் தவறான வதந்திகளை பரப்பாமல் மாவட்ட நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து அமைதியான நகரமாக திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை மாவட்டமாக உள்ளதால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் பாடுபடுவேன். மேலும் அனைத்து கிராமங்களிலும் சாலைகள், பள்ளிகள், குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார.  அதைத் தொடர்ந்து சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சேதப்படு த்தப்பட்ட வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் மாணவி 3- வது மாடியில் இருந்து கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
    • காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக இறந்து போன மாணவியின் தந்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ நாகப்படினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது பக்கத்து வீடான முனுசாமி என்பவர் குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்தார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வீடியோ என்று தெரியவருகிறது . இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவி ஸ்ரீமதியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்யான செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • சின்னசேலம் பகுதியில் கலவரக்காரர்களை ஒருங்கிணைத்த 4 வாட்ஸ் அப் குரூப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கடந்த 17-ந் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தில் இளைஞர்களை ஒன்றிணைத்த 'வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்கள், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பியவர்கள் என பலரை யும் போலீசார் தேடி கைது செய்து வருகின்றனர். துவரை 4 'வாட்ஸ் ஆப்' குரூப்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்ற குழுவில் 518 பேர், 'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி என்ற குரூப்பில் 508 பேர், ஹியூமனாட்டி என்ற குரூப்பில் 371 பேர், மற்றொரு குரூப்பில் 250 பேர் என 4 குரூப்களில் 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். இதில் கலவரத்தில் பங்கேற்றவர்களின் நபர்களை கண்டறியும்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிகேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
    • மாணவியின் பெற்றோர் கோரிக்கை ஏற்கப்படாமல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து விட்டனர்.

    இன்று 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. இதனிடையே நீதிகேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் பெற்றோர் கோரிக்கை ஏற்கப்படாமல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதன் எதிரொலியாக மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்குவதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அவர்கள் இன்று மதியம் 2 மணிக்கு மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று மாலையே மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இதுதவிர தடயவியல் குழுவினரும் பள்ளிக்கு நேரில் விசாரணையை நடத்தி உள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

    இதுபற்றி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதவிர தடயவியல் குழுவினரும் பள்ளிக்கு நேரில் விசாரணையை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் மாணவி இறந்த பள்ளிக்கு சென்றனர். அங்கு உள்ள காவலாளி மற்றும் டிரைவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

    அதன்பின்னர் மாணவி தங்கி இருந்த விடுதி அறை, மாடியில் இருந்து குதித்த இடம் ஆகியவற்றையும் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார்.
    • முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் கடந்த 17-ந்தேதி நடந்த கலவரத்தின்போது மர்ம கும்பல் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியது. அதோடு பள்ளியில் இருந்த பொருட்களை எடுத்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தச்சூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா போடப்பட்டது. அதில், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கலவரம் நடந்த போது அங்கிருந்த பொருட்களை தூக்கி வந்து விட்டார்கள். அதை யாரேனும் எடுத்திருந்தால் ஊராட்சி பள்ளியில் வைத்து விடவும். இல்லையெனில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பழனிவேல் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் மல்லிகா அண்ணாதுரை உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் சிவசூரியன் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. தச்சூரை தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளிலும் இதேபோல தண்டோரா போட முடிவுசெய்துள்ளனர்.

    • மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது.
    • வழக்கு முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

    இன்றும் 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. அந்த முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    ×