என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accommodation without permission"

    • சின்னசேலம் பள்ளியில் அனுமதி இன்றி விடுதி செயல்பட்டது தெரியவந்துள்ளது.
    • அனுமதி பெறாமல் விடுதி நடத்துவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் இறந்து போனார். இதுகுறித்து விசார ணைக்காக மாநில குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகிய 3 உறுப்பினர்களை கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகி யோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா

    ஆகியோரிடம் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை செய்தனர். விசாரணை முடிவுற்ற நிலை–யில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது ஆணைய தலைவர் கூறியதாவது, விசாரணை–யில் சம்பந்தப்பட்ட அதிகாரி–களின் செயல்பாடுகள் குறித்து அவர்களது துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட கலெக்டர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிப்பு கொடுத்திருந்தார். ஆனால் கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனுமதியின்றி விடுதி செயல்பட்டது தெரிய வந்தது. அவ்வாறு அனுமதி பெறாமல் விடுதி நடத்துவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும். விசாரணைக்கு அனை வரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் மாணவி ஸ்ரீமதிக்கு முதலில் மருத்து வம் பார்த்த மருத்துவர் பணி சுமையின் காரணமாக விசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து வருகிற 27- ந்தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விசாரணை நடைபெறும் எனக் கூறினார்

    ×