என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன்: புதிய கலெக்டர் உறுதி
    X

     பதவி ஏற்ற புதிய கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன்: புதிய கலெக்டர் உறுதி

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன் என்று புதிய கலெக்டர் உறுதியளித்தார்.
    • மாணவி 3- வது மாடியில் இருந்து கீழே விழுந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மா வட்டத்தில் புதிய கலெக்டராக ஷ்ரவன்குமார் ஜடாவத் பெறுப்பேற்றார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி கள்ள க்குறிச்சி மாவ ட்டத்தின் 3-வது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கையுடன் பணி வழங்கிய முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். கடந்த ஒரு வாரத்தில் பள்ளி மாணவி இறப்பு குறித்து தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மற்றும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நியாயமான விசாரணை மேற்கொள்ள ப்பட்டு சட்டரீ தியான நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 3- வது ஆட்சியராக பொறுப்பேற்ற நான் பொது மக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக உள்ளேன்.

    மேலும் தமிழக அரசின் அனைத்து துறைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் முழு வீச்சில் வழங்க நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களுக்கு சிறிய வேண்டுகோள் தற்போது உள்ள சூழ்நிலையில் தவறான வதந்திகளை பரப்பாமல் மாவட்ட நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து அமைதியான நகரமாக திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை மாவட்டமாக உள்ளதால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் பாடுபடுவேன். மேலும் அனைத்து கிராமங்களிலும் சாலைகள், பள்ளிகள், குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார. அதைத் தொடர்ந்து சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சேதப்படு த்தப்பட்ட வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் மாணவி 3- வது மாடியில் இருந்து கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×