என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • தியாகதுருகத்தில் உள்ள பாலமுருகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    • பாலமுருகன் சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பாலமுருகன் சாமிக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத கிருத்திகையான நேற்று காலை பாலமுருகன் சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோட்டகுளத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள் சாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவர்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
    • பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கவுதமசிகாமணி கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷர்வன்குமார் ஜடாவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் கூறியுள்ளதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. அந்தப் பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் சுமார் 4000 மாணவர்கள் படிப்புகேள்விக்குறியாகி உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி வளாகத்தில் நகர்புற சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை–வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி–யோர் முன்னிலை வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுத–பாணி, மருத்துவர்கள் ஜெகதீஷ், பிரபாவதி, ஜெனிபர் ராகுல் ஆகி–யோர் பங்கேற்றனர். மேலும் அடங்கிய மருத்துவ குழுவினர் பொது–மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ–மனைகள், மருத்து–வக்கல்லூரி மருத்துவமனை, பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்களில் நடைபெறுகிறது. மேலும், சிறப்பு ஏற்பா–டாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் 93 மையங்கள் உட்பட2,448-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமுன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Booster Dose) 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தியவர்கள் மூன்றாவ–தாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இப்பணிக்காக 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு 40,500 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு–ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டிநடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் வட்டார அளவிலாள செஸ் போட்டி ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

    திருநாவலூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை திருநாவலூர் அடுத்த தேவியானந்தல் கிராமத்தில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிராமத்தில்உள்ள ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருநாவலூர் யூனியன் தலைவர் சாந்தி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேசன், ஒன்றிய கவுன்சிலர் விஜய் ஆறுமுகம்ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஆளவந்தான் ,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராணி ஏழுமலை, ஊராட்சி எழுத்தர் உமா மகேஸ்வரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்துதேவியானந்தல் கிராமத்தில் பொது இடத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி கிராமத்தில்நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
    • மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.

    பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    • மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
    • மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    ஆம்புலன்ஸ் வழியில் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில், மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும், மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

    • திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது.
    • பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது. ஆம்புலன்ஸ் மற்றும் அதன் துணை வாகனம் இரண்டும் கன்டெய்னர் லாரியுடன் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதிய சேதமடைந்தது.

    பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர்.
    • மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    நேற்றைய விசாரணையின்போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
    • இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மாணவியின் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். நேற்றைய விசாரணையின்போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பெற்றோர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவுறுத்தினர்.

    • சின்னசேலம் பகுதியில் 144 தடையின் காரணமாக மது பிரியர்கள் சேலம் மாவட்டத்துக்கு படையெடுக்கின்றனர்.
    • கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி அன்று பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பஸ் என அனைத்து வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி அறைகளை நொறுக்கி சேதப்படுத்தினார்கள். எஸ் பி, டி எஸ் பி, மற்றும் பெண் காவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்களும் தாக்கப்பட்டார்கள்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டது. மதுபான கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் அவதிப்பட்டு வந்தார்கள். பின்பு அருகில் உள்ள சேலம் மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு படையெடுத்துச் சென்று மது அருந்து வருகிறார்கள் மது பிரியர்கள்.

    • சின்னசேலம் பள்ளியில் வன்முறை சேதத்தை புலனாய்வு குழு டிரோன் காமிரா மூலம் பதிவு செய்தனர்.
    • இந்த சேதங்களை கணக்கிடும் பணி யில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கடந்த17-ந் தேதி வன்முறை ஏற்பட்டது. அப்போது கலவரக்காரர்கள், பஸ்கள், கார், டிராக்டர், பொக்லைன், முதல்வர் அறையில் இருந்த கணினி மற்றும் ஆவணங்களை எரித்தனர்.

    இந்த கலவரத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சேதங்களை கணக்கிடும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த குழுவினர் முதல் கட்டமாக வன்முறை நடந்த பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி வகுப்பறைகள், கலவரத்தில் எரிக்கப்பட்ட பஸ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 'டிரோன்' மூலம் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட சேதங்களை வீடியோ பதிவு செய்தனர். தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×