என் மலர்
நீங்கள் தேடியது "சட்டம் ஒழுங்கை பராமரிப்பது"
- கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது முதல் கடமை என்று போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேட்டி அளித்தார்.
- மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது அவர் செய்தி யாளரிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி நடந்த இந்த சம்பவங்களை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீராக சரியான முறையில் பராமரிப்பது முதல் கடமை. மேலும் மற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை எப்போதும் போல் அமைதியான மாவட்டமாக எடுத்துச் செல்ல உள்ளேன். அதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும். என கூறினார். மாவட்ட காவல்துறை அமைதி ஏற்படுத்துவதை முதல் கடமையாக கொண்டுள்ளது. மேலும் அனைத்து குழுவினருக்கும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். தொடர்ந்து சி.பி.சி.ஜ.டி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். மேலும் உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய தேவையான நட வடிக்கைகளை மேற்கொ ள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இவர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சூப்பிரண்டாக கடலூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல் ஆகிய மா வட்டங்களில் பணியில் இரு ந்துள்ளார். சென்னையில் தியாகராய நகர், அடையார் பூக்கடை துணை கமிஷனர் ஆகிய பதவி வகித்துள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும் இருந்துள்ளார். கள்ள க்குறிச்சி மாவ ட்டத்தில் முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயச்சந்திரன் பொறு ப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து ஜுயாவுல் ஹக், செல்வகுமார் ஆகியோர் பணிபுரிந்து வந்த நிலையில் மாவட்டத்தின் 4-வது போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி சென்னை பத்திரப்பதிவுத்துறையில் உதவி ஐ.ஜி. யாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.






