search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவலூர் அருகே கடன் பிரச்சினையால் விவசாயி விஷம் குடித்து சாவு
    X

    திருநாவலூர் அருகே கடன் பிரச்சினையால் விவசாயி விஷம் குடித்து சாவு

    • திருநாவலூர் அருகே விவசாயி கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32) இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயகுமார் கடன் வாங்கினார். மேலும் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றார். சுயேட்சையாக நின்ற போதும் இவருக்கு கடன் ஏற்பட்டது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சுயேட்சை தேர்தலில் நின்றதற்கு செலவழிக்க பணத்திற்காக இவர் பல நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். . இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.

    கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் விஜயகுமாரை திட்டி உள்ளனர். இதனால் நேற்று விஜயகுமாரின் மனைவி இவருடன் சண்டை போட்டு விட்டு திருநாவலூர் காமராஜர் நகரில் உள்ள அ வரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றார் அதற்கு அவரது மனைவி வர மறுத்து விட்டார். கடன் பிரச்சினை யால் தவித்து வந்த விஜயகுமார் மனை வியுடனும் தகராறு ஏற்பட்டதனால் மன உளைச்சலில் இருந்தார். மேலும் மனைவியும் வர மறுத்து விட்டதால் உடனே மாமியார் வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டு தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மனைவி மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட சோகம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Next Story
    ×