என் மலர்
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது திருப்புலிவனம் கிராமம். இந்த கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-
. எங்களது கள ஆய்வில் திருப்புலிவனத்தில் இருந்து மருதம் செல்லும் சாலையில் இந்த 2 கற்களை கண்ெடடுத்தோம். இது விஜய நகர மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாகும். 50 சென்டிமீட்டர் அகலமும் 75 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட ஒரு கல்லும், அதன் அருகில் 35 சென்டிமீட்டர் அகலமும் 70 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கல்லும் உள்ளது. இந்த கல்லின் இடதுபக்கம் சூல சின்னமும் அதன் கீழ் பன்றி உருவமும் உள்ளது. இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும். வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும் அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குல சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
மன்னர் காலங்களில் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக 4 திசைகளில் சூல சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள் இதற்கு சூல கற்கள் என்று பெயர்.
இந்த நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக கோவில்களுக்கு மன்னர்கள் வழங்கினார்கள். இது கோவில் நிதி வருவாய்க்கான ஏற்பாடாகியிருந்தது. இதன் மூலம் அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கு எரிதல், அமுது படைத்தல், மற்றும் கோவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஊரில் பல்லவர் காலத்தை சேர்ந்த புகழ்பெற்ற சிவன் கோவிலான வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது எனவே இது இந்த கோவிலுக்கு கொடுத்த நிலத்தின் எல்லையை குறிக்கும் சூல கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஊர் மக்கள் இதை இன்றும் எல்லைல்கல் என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில் கழுதை மற்றும் புறா உருவம் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இதில் இடம் பெற்றிருப்பது அரிதாகவே கருத வேண்டியுள்ளது. விஜய நகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த புறா மற்றும் கழுதை குல சின்னங்களாக கொண்டவர்கள் இந்த கோவிலுக்கு நிலம் வழங்கியதாக இருக்கக்கூடும் என்று கருதுகிறோம். மேலும் இதுகுறித்து தொடர் ஆய்வில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். பின்னர் நண்பர்கள் மட்டும் வீடு திரும்பிய நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சிவகாஞ்சி போலீசில் மணிகண்டன் மாயமானதாக புகார் செய்தனர்.
மாயமான மணிகண்டன் குறித்து சிவகாஞ்சி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் மணிகண்டனுடன் மது குடித்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவரது உடல் சற்று அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவலின்பேரில் கீழ்கதிர்பூர் பகுதிக்கு விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் விவசாய கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியோடு மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் விவசாய கிணற்றில் கிடந்தது கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும் கிணற்றின் அருகாமையில் மதுபான பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாலுசெட்டி சத்திரம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர் மணிகண்டன் மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லாது தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது மது போதையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
குன்றத்தூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43). லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது லாரியில் மறைமலை நகர் தொழிற்சாலைகளில் உள்ள இரும்பு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்தார். லாரியை டிரைவர் லாரன்ஸ் (47) ஓட்டி வந்தார். அப்போது லாரி பழுதானது.
இதையடுத்து லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு லாரி உரிமையாளர் முருகவேல் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் அன்வர் என்பவரை அழைத்து வந்து லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கார்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் முருகவேல், அன்வர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியதால் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிண்டுராய் மற்றும் லாரி டிரைவர் லாரன்ஸ் ஆகியோர் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வாலாஜாபாத்:
காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள வெங்கடேச பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர் அய்யன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வங்கியில் பணி முடித்து முத்தியால்பேட்டை - களியனூர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நத்தப்பேட்டை முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் வேகமாக சென்றபொழுது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலை அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக் காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திகேயன் உயிரிழந்தது விட்டதாக கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார், கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சீபுரம்:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தொடக்கத்தில் அச்சம் அடைந்திருந்த பொதுமக்கள் பின்னர் ஆர்வத்துடன் முன்வந்தனர். இந்த நிலையில காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது குறைந்த அளவில் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதால் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என 30 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

திருப்போரூர் முருகன் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறியது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக கோவில்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் நடைபெறுவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோவில்களில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பல ஜோடிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருப்போருர் கந்தசாமி கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் நேற்று காலை வந்தனர்.
கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருப்போரூர் முருகன் கோவில் வெளி வளாகத்தில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடிய நிலையில் பலர், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. எனவே கோவில் முன்பு சில நிபந்தனைகளுடன் திருமண ஜோடிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே செவிலிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவரது மனைவி வெண்ணிலா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மற்றும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறந்து கிடந்த வெண்ணிலா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை பிறகே இளம்பெண் வெண்ணிலாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவித்த நிலையில் காஞ்சீபுரம் புதிய ரெயில்வே சாலை, பெரிய காஞ்சீபுரம் தர்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.
பொதுமக்கள் ஏராளமானோர் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்குவதற்காக அங்கு குவிந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை மற்றும் மது ஊறல்கள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை மற்றும் மது ஊறல்கள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் போலீசார் மதுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 130 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் மேலும் 340 லிட்டர் மது ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இது சம்பந்தமாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்றாலோ அல்லது ஊறல் வைத்திருந்தாலோ காஞ்சீபுரம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044 -27 236 111 மற்றும் தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண் 044- 27238001 என்ற தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், எஸ்.எஸ்.போஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 34), இவர் விலங்குகளை அழகுபடுத்தும் வேலையை வெளிநாட்டில் செய்து வந்தார். இவரது மனைவி நிமி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்தவர் இங்குள்ள விலங்குகளை அழகுபடுத்தும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த நிமி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீ பரவியதைடுத்து அலறினார்.
அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகினறனர்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் குரோம்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். சலவை தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகள் கயல்விழி(வயது 6).
இந்த தம்பதிக்கு 4 வயதில் சர்வேஷ் என்ற மகன் இருந்தான். நேற்று காலை சர்வேஷ், தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தான். அவனது பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர்.
சிறிதுநேரம் கழித்து அவனது பெற்றோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தங்களது மகன் சர்வேஷ், மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை.
பின்னர் வீட்டின் முன்புறம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மேல் மூடப்பட்டிருந்த பலகை சற்று விலகி இருந்ததால், சந்தேகத்தின்பேரில் பலகையை எடுத்து பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சர்வேஷ் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை சர்வேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை சர்வேஷ், எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, ஜான்சிராணி தெருவை சேர்ந்தவர் ஜெகன்குமார். ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி பைரவி (வயது 34). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வார்டு மேலாளராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று மதியம் பைரவி தனது வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் மற்றும் மகன்கள் இருவரும் வீட்டின் உள்ளே இருந்தனர்.
அப்போது அருகே உள்ள மின்சார மோட்டாரில் இருந்த வயரில் எதிர்பாராதவிதமாக பைரவியின் கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது கணவர் ஜெகன்குமார் மற்றும் மகன்கள் ஓடி வந்து பார்த்தனர்.
பின்னர் பேச்சு மூச்சு இன்றி கிடந்த பைரவியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பைரவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.