என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் கியாஸ் குடோனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    குறிப்பாக பெருந்துறை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன.

    இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் பற்றிய விவரம் அவர்களது பின்னணி குறித்து முழுவதுமாக தெரிந்த பின்னேரே பணியில் அமர்த்த வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் கியாஸ் குடோனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வங்கதேசத்தை சேர்ந்த முகமது மொட்டி ரகுமான் (52), முகமது சொராத் காஜி (40), ரபூல் காஜி (20), முகமது மோக்சத் அலி (43), முகமது அன்சாரி ரகுமான் (32), மொனி ரூல் இஸ்லாம் (32), முகமது சபிக்குல் இஸ்லாம் (40), முகமது அஸ்ரம் உஸ்மான், ஹாரிபுல் இஸ்லாம்(28), சபுல்இஸ்லாம் (41) ஆகிய 10 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் வேலை தேடி முதலில் சட்டவிரோதமாக மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைந்து அங்கு சில மாதங்கள் தங்கி கட்டிட வேலை பார்த்தது தெரியவந்தது. அதன் பின்னர் தெரிந்தவர்கள் மூலம் ஈரோடு பெருந்துறை மாணிக்கம் பாளையத்திற்கு வந்து கட்டிட தொழிலாளியாக பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வேலை பார்த்து வந்ததும் அவர்கள் தனித்தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து ரெயில் மூலம் சட்டவிரோதமாக இங்கு வந்து வேலை பார்த்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் பாஸ்போர்ட், விசா போன்ற முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. பின்னர் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் யாராவது சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வருகிறார்களா? என்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
    பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை வழிபட்டனர்.
    ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் குடியிருப்புக்கு மத்தியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் இந்த கோவிலுக்குள் 5 அடி நீள நாகபாம்பு ஒன்று வந்தது. அந்த பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை வழிபட்டனர்.

    மேலும் பூசாரி வந்து பூஜை செய்து கற்பூரம் ஏற்றி காட்டினார். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. சிறிது நேரத்தில் அந்த கோவில் முன்பு ஏராளமான மக்கள் கூடிவிட்டனர்.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு வந்து அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டார். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார். இதனால் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
    சாலையில் யானை வாகனங்களை வழிமறித்தபடி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். அதேபோல் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது. யானை சாலையில் நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்த வாகனத்தை நிறுத்தினர்.

    வாகனங்களை கண்ட ஒற்றை யானை வாகனங்களின் நோக்கி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது.

    இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. சாலையில் யானை வாகனங்களை வழிமறித்தபடி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை 29-வது தடவையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே பவானி ஆற்று வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 9 கீழ் மதகுகள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,324 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 5,200 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

    தற்போது திறக்கப்படும் உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் போது பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    போலீசார் வருவாய்த் துறையினர் தீயணைப்பு துறையினர் பொதுப்பணித் துறையினர் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோபி கொடிவேரி அணையில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    புஞ்சைபுளியம்பட்டியில் போலீஸ் என கூறி பணம் பறித்த 2 பேர் கைதான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 64). இவர் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ஜவுளி கடையின் முன்பு நின்று கொண்டு இருந்த போது, மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தார்கள். அதில் ஒருவர் நான் புஞ்சைபுளியம்பட்டிக்கு புதிதாக வந்துள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ஏன் முககவசம் அணியவில்லை? என்று மிரட்டி அபராதம் கட்டு என 200 ரூபாயை வாங்கி சென்றுவிட்டார்கள்.

    அவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டதால், சேட்டு நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கு போலீசார் புதிதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் பணியில் சேரவில்லை என்று கூறினார்கள். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சேட்டுவிடம் பணம் பறித்தவர்களை தேடி வந்தார்கள்.

    இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் தண்டுகாரன்பாளையத்தை சேர்ந்த கணேசன் (35), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்ன கள்ளிபட்டியை சேர்ந்த குணசேகரன் (23) என்பதும், இவர்கள் இருவரும்தான் சேட்டுவிடம் 200 ரூபாய் பறித்தது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.

    அந்தியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் சித்ரா (வயது 55). இவருடைய கணவர் பெயர் சுப்பிரமணியன். இவர்களுடைய மகள் விஜயலட்சுமி (33).

    சித்ராவும், விஜயலட்சுமியும் அந்தியூர் அருகே உள்ள கணபதி காட்டூரில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். நேற்று காலை சித்ராவின் வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்கள்.

    அப்போது வீட்டுக்குள் சித்ரா இறந்து கிடந்தார். அவரின் உடல் அருகிலேயே மகள் விஜயலட்சுமியும் இருந்தார். ஆனால் தாய் இறந்தது அவருக்கு தெரியவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சித்ராவின் வாயில் நுரை வந்திருந்தது. மூக்கில் ரத்தம் வழிந்திருந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். சித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தாக்கப்பட்டு இறந்தாரா? என்று தெரியவில்லை.

    பிரேத பரிசோதனைக்கு பின்பு மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தார்கள்.

    மனநலம் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூர் அணை நிரம்பியது. இதையடுத்து பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 789 தண்ணீராக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 844 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98.95 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டி விடும். எனவே அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

    இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சி, பவானிசாகர் பேரூராட்சி சார்பில் மாமரத்துப்படித்துறை, அக்ரஹாரம், பரிசல்துறை, கொமாரபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகள், ஆலத்துக்கோம்பை மற்றும் பவானிசாகர் பூங்கா, கொட்டாம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன் துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    அதில் பவானி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வருவதால் பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பவானி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை முதல் அந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 456 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கன அடியும் என மொத்தம் 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி வரை கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டினாலே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படும்.

    தற்போது தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    துக்கம் விசாரித்து விட்டு வந்தபோது சித்தோடு அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
    பவானி:

    ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. தற்போது இவர் சித்தோட்டை அடுத்த சந்தைமேடு பகுதியில் சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி யுவராணி. இவர்களுடைய மகன் நாகேந்திரன் (வயது 20).

    சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக மாரிமுத்து, யுவராணி, நாகேந்திரன் மற்றும் அவர்களுடைய உறவினர்களான அருண் (19), ரஞ்சித்குமார் ஆகியோர் ஒரு காரில் நேற்று முன்தினம் சென்றனர்.

    துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் காாில் சித்தோடு நோக்கி வந்தனர். காரை நாகேந்திரன் ஓட்டினார். சித்ேதாட்டை அடுத்த தயிர்பாளையம் பிரிவு அருகே வந்தபோது கார் நிலைதடுமாறி அங்கிருந்த கோவில் அருகே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நாகேந்திரன், அருண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த நாகேந்திரன், அருண் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் 2 பேரும் கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியிலேேய அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் மாரிமுத்து, யுவராணி, ரஞ்சித்குமார் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்துபோன 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மனைவி ராணி, மகன் நாகேந்திரன் (வயது 20) மற்றும் மகனின் நண்பர் ரஞ்சித்குமார், உறவினர் அருண் (19) ஆகியோருடன் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றார்.

    பின்னர் அவர்கள் மீண்டும் சித்தோடு நோக்கி இரவு வந்து கொண்டிருந்தனர். காரை நாகேந்திரன் ஓட்டி வந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் கார் ஈரோடு- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் சித்தோடு அருகே உள்ள தயிர்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் இடது பக்கம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

    இந்த விபத்தில் நாகேந்திரன், அருண் ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தனர். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மாரிமுத்து, அவரது மனைவி ராணி, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் பலியான நாகேந்திரன், அருண் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புரோட்டா மாஸ்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை குடிபோதையில் வந்தார். அந்த பகுதியில் 4 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு தேவராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டார். இதனால் தேவராஜ் சிறுமியின் வாயை கைகளால் மூடினார். இதில் சிறுமியின் மூக்கில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதை கண்டு பயந்து அவர் அங்கு இருந்து ஓடி விட்டார்.

    சிறுமியின் மூக்கில் ரத்தம் வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது தாய்க்கு தகவல் கொடுத்தனர். சிறுமியின் தாய் வந்து அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவத்தை அவரிடம் சிறுமி கூறினார்.

    இது குறித்து சிறுமியின் தாய் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பவானி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமி மற்றும் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்குப் பதிவு செய்து தேவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன் சேட்டுவை தலையில் கல்லால் தாக்கியுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் இன்று காலை பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அவரது உடல் அருகே ரத்தக்கறையும் படிந்து இருந்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த அசேன்சேட்டு (52) என்பதும், திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன் சேட்டுவை தலையில் கல்லால் தாக்கியுள்ளனர். பின்னர் உயிருக்கு போராடிய அவரை தீ வைத்து எரித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் வரவழைக் கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக கருங்கல் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குபதிவு செய்து அசேன் சேட்டுவை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்து வருகிறார்.

    ×