என் மலர்tooltip icon

    ஈரோடு

    ரூ.2 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான 8 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
    ஈரோடு:

    ரூ.2 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான 8 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

    ஈரோடு நேதாஜி  தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 800 பேர் உறுப்பினராக உள்ளனர். 

    இந்நிலையில் மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி வரை மார்க்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் வசூலித்து உள்ளனர்.
     
    பின்னர் நசியனூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி அதனை வியாபாரிகளுக்கு கிரையம் செய்யாமல், சங்க நிர்வாகிகள் அவர்களது பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பத்திர பதிவு செய்துள்ளனர். 

    வியாபாரிகளிடம் வசூலித்த பணத்தை திருப்பித் தராமல் ரூ.2 கோடி மோசடி செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், அ.தி.மு.க. பிரமுகர்களுமான 5  பேர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் என மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
     
    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி சங்க பொருளாளரும், அ.தி.மு.க.  வார்டு  செயலாளருமான வைரவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அ.தி.மு.க. பிரமுகரின் மகனான வினோத்குமார் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த சங்க துணைச் செயலாளரும், அ.தி.மு.க. உறுப்பினருமான கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவரை  மாவட்ட குற்றபிரிவு  போலீசார்  கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேரை போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துகாளியம்மன்கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள பாரியூர் கொண்டத்துகாளியம்மன்கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். மேலும் பெண்கள் பலர் பொங்கல் வைத்து சாமிதரிசனம் செய்தனர். 

    இதில் கோபி, பாரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள்  முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து அம்மனை வழிபட்டனர்.

    குண்டம் விழாவையொட்டி இன்று இரவு குண்டம் முன்பு பொங்கல் வைத்து  சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து 50 அடி நீளம் கொண்ட குண்டம் வளர்க் கப்படுகிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தினர்.

    நாளை அதிகாலை 5.30 மணிக்கு குண்டம்விழா நடக்கிறது. இதில் பூசாரிகள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் மட்டும் தீ மிதிக்கிறார்கள்.  கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை. 

    தொடர்ந்து நாளை காலை 9 மணிக்குமேல் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு வழி முறைகளை கடைப்பிடித்து சாமிதரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கருமாண்டி செல்லிபாளையம் ரேஷன்கடையில் பொங்கல்தொகுப்பு விநியோகத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கருமாண்டி செல்லிபாளையம் ரேஷன்கடையில் பொங்கல்தொகுப்பு விநியோகத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    மேலும் குடும்பஅட்டைதாரர்களிடம் பொங்கல்பரிசு பொருட்கள் சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார். 

    மேலும் பொங்கல்பரிசு தொகுப்புகள் பெறும் குடும்பஅட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் கட்டாயம் முககவசம் அணிந்து கொண்டும், சமூகஇடைவெளியை பின்பற்றியும், கொரோனா தடுப்புநடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து பரிசுபொருட்களை பெற்றுகொள்ளவேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக குடும்பஅட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை தாசில்தார் கார்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக ஈரோட்டில் இருந்து இன்று பல்வேறு பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக ஈரோட்டில் இருந்து இன்று பல்வேறு பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொங்கல்பண்டிகை நாளைமறுநாள் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    எனவே பொங்கல்பண்டிகை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் குவிந்தனர். 
     
    மக்கள் சிரமமின்றி தங்களது சொந்தஊருக்கு செல்வதற்காக தமிழ்நாடுஅரசு போக்குவரத்துகழகம் ஈரோடுமண்டலம் சார்பில் நேற்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

    நேற்று இரவு 40 சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன. கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை, சென்னை போன்ற ஊர்களுக்கு இந்த சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன. 

    அதைதொடர்ந்து இன்று இரவு ஈரோடுமாவட்டத்தில் இருந்து  பல்வேறு மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படஉள்ளது. 

    இதைத்தொடர்ந்து நாளை இரவும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 100 சிறப்புபஸ்கள் இயக்கப்பட உள்ளன. 

    மேலும் பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்குஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பொங்கல்பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பஸ், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பொங்கல்பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பஸ், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படஉள்ளது.   மேலும் வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
     
    பொங்கல்பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் முன்கூட்டியே சொந்தஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். 

    ஏற்கனவே சொந்தஊருக்கு செல்வதற்காக திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகளும் தற்போது செல்கின்றனர். இதனால் ரெயில்நிலையம், பஸ்நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இதேப்போல் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களும் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். 

    ஈரோடு பஸ்நிலையத்தில் கொரோனா தடுப்புநடவடிக்கையாக அரசுபஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.பொங்கல்பண்டிகை மற்றும் தைப்பூசத்தையொட்டி அரசு அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையும், தொழிலாளர்களுக்கு ஒரு வாரமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    இதனால் பொங்கல்பண்டிகை கொண்டாட தங்களது குடும்பத்தினருடன் நேற்று முதல் பஸ்நிலையம், ரெயில்நிலையங்களில் குவிந்து வருகின்றனர். வெளிமாவட்ட மக்களுக்காக சிறப்புபஸ்களும் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. 

    கொரோனாபரவல் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும்  பஸ்களில் 75 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று ஈரோடு பஸ்நிலையத்தில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
    சிறுத்தை குட்டி வனப்பகுதியில் இருந்து மாட்டு கொட்டகைக்கு எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன.

    அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழும் சிறுத்தைகள் அடிக்கடி கிராம பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த பங்களா தொட்டி என்ற பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம்போல மாடுகளை பராமரிக்க மாட்டு கொட்டகைக்கு சென்றார்.

    அப்போது மாட்டுக்கொட்டயின் ஒரு பகுதியில் ஒரு சிறுத்தை குட்டி சோர்வுடன் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு பரிசோதனை செய்தனர். அப்போது அது 3 மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை மீட்டு ஆசனூர் வனஅலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறை டாக்டர். அசோகன் சிறுத்தை குட்டியை பரிசோதனை செய்தார். பரிசோதனையில் சிறுத்தை குட்டி சோர்வுடன் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து மருத்துக் குழுவினர் சிறுத்தை குட்டிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுத்தை குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அதனை மீண்டும் தாயிடம் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த சிறுத்தை குட்டி வனப்பகுதியில் இருந்து மாட்டு கொட்டகைக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஈரோட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மேலும் வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் முன் கூட்டியே சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

    ஏற்கனவே சொந்த ஊருக்கு செல்வதற்காக திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகளும் தற்போது செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதேப்போல் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்களும் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை யொட்டி அரசு அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையும், தொழிலாளர்களுக்கு ஒரு வாரமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது குடும்பத்தினருடன் நேற்று முதல் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். வெளி மாவட்ட மக்களுக்காக சிறப்பு பஸ்களும் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா பரவல் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் 75 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

    குன்றி மலைப்பகுதியில் ஒரு மாதத்துக்குள் செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி முழுமையாக முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற உள்ளதால் மலைகிராம மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து யூனியனை சேர்ந்தது குன்றி மலை கிராமம். வனப்பகுதிகள் நிறைந்த இங்கு 15 குக்கிராமங்கள் உள்ளன. கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

    இங்கு எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லை. இந்த 15 குக்கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம், கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

    இங்கு 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், 120-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் அடர்ந்த வனப்பகுதியை கடந்தே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. இங்குள்ள மாணவர்களுக்கு செல்போன் டவர் இல்லாததால் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குதியாளதூர் என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள ஒரு இடத்தில்தான் சிக்னல் கிடைக்கும்.

    ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதைத்தாண்டி தான் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் படிப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என நீண்ட வருடமாக மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மலைப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதன் பயனாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பாக மலை கிராமப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக அங்குள்ள மலை உச்சியில் உள்ள பட்டா நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் கான்கிரீட் கட்டும் பணி தொடங்குகிறது.

    அதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்துக்குள் செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி முழுமையாக முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற உள்ளதால் மலைகிராம மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    கடந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 2 முறை 100 அடியை தொட்டது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் பவானிசாகர் அணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 2 முறை 100 அடியை தொட்டது. அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனம், கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தாலும் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கியது. பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.14 அடியாக இருந்தது. அணைக்கு 892 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி கால்வாயில் 200 கனஅடியும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2300 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதேஅளவில் இருந்தால் அணையின் நீர்மட்டம் இன்னும் 2 நாட்களில் 100 அடிக்கு கீழே சென்று விடும்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட் களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதன் எதிரொலியாக ஈரோட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ தாண்டி வருகிறது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

     இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரேநாளில் 76பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    இதனால்  மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. 

    மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது மாவட்டம் முழுவதும் 627பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.

     புதியதிட்டங்கள், வளர்ச்சிப்பணிகள், பிறதுறை சார்ந்த பணிகளுக்கு தனிஅலுவலர்களை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.

    இதன் காரணமாக ஈரோடு கலெக்டர்அலுவலகத்தில் உள்ள ஊரகவளர்ச்சிமுகமை திட்டஅலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிஒன்றியஅலுவலகங்களில் ஊழியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதன் காரணமாக கிராமப்பகுதியில் உள்ள குடிநீர்பணிகள், துப்புரவுபணிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள், 100 நாள் வேலைவாய்ப்புதிட்டம் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறைஅலுவலர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறும்போது:-

    எங்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தற்செயல் விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

    இனியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார். 

    இந்நிலையில் திருமண உதவிதொகை பெறுவதற்காக ஊராட்சி ஒன்றியஅலுவலகத்துக்கு வந்த பெண்கள் ஊழியர்களின் விடுப்புபோராட்டத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.

    ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.
    ஈரோடு,

    ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளிசந்தை இயங்கிவருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரசந்தையும் நடந்து வருகிறது.

    வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும்.

    இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். 

    இங்கு சாதாரண நாட்களைவிட விசேஷநாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில வாரமாக வியாபாரம் மந்தமாக இருந்து வந்தது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

    குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

    ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில்  வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெறும் 20 சதவீதம் அளவிற்கு மட்டுமே மொத்த விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதேநேரம் சில்லரை விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடந்தது.

    தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை, ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதனால் இன்று 40 சதவீதம் சில்லரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
    ×