என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    பவித்ரா கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் அவர் சரியாக சாப்பிட முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவியின் தந்தை செல்வன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியில் சென்று விட்டனர். தனியாக இருந்த பவித்ரா வீட்டில் உள்ள ஒரு அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டு வந்து பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டனர். அப்போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம் பாளையம் பீக்கிரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (75) விவசாயி. இவருக்கு பீக்கிரி பாளையம் செல்லப்பன் தொட்டி என்ற பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது சோளம் பயிரிட்டு உள்ளார்.

    சோள தோட்டத்தில் வன விலங்குகள் இரவு நேரத்தில் வந்து நாசம் செய்து வந்தது. இதையடுத்து குருநாதன் இரவு நேரத்தில் தோட்ட காவலுக்கு சென்று வந்தார். இதே போல் சம்பவத்தன்று இரவும் வழக்கம் போல் தோட்ட காவலுக்கு சென்றார். அப்போது இரவு 11 மணி அளவில் ஒற்றை காட்டு யானை சோள தோட்டத்துக்குள் நுழைந்தது. இதைப்பார்த்த குருநாதன் சத்தம் போட்டு யானையை விரட்டினார்.

    இதையடுத்து ஒற்றை யானை குருநாதனை நோக்கி ஓடி வந்தது. இதைப்பார்த்து அவர் யானையிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற யானை குருநாதனை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியது.

    மேலும் குருநாதனின் இடது கை, இடது கால், மார்பு மற்றும் தலையில் காலால் மிதித்தது. இதையடுத்து குருநாதன் சத்தம் போட்டார். சத்தத்தைக் கேட்டு பக்கத்து தோட்டக்காரர்கள் ஓடி வந்தனர். அப்போது யானையை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து சென்றது.

    இதையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த குருநாதனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே குருநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வனத்துறையினரும் விசாரணை நடத்தி யானை தாக்கி இறந்த குருநாதனின் குடும்பத்தினருக்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று உச்ச கட்டமாக ஒரே நாளில் மேலும் 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று உச்ச கட்டமாக ஒரே நாளில் மேலும் 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
     
    இதையடுத்து சுகாதாரதுறையினர், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் பாதிக்குபாதி மாநகர் பகுதியில் தான் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:-

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநகர் பகுதியில் 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு  லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

    எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. மொத்த பாதிப்பில் வெறும் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற அவசியம் ஏற்படுகிறது. மீதி உள்ளவர்கள் வீடுகளில் தனிப்படுத்தி கொண்டாலே போதும். 

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தாலே சிறிதும் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் செ ன்று பரிசோத னை செய்து கொள்ள வேண்டும்.
     
    மாநகர் பகுதியில் தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்தப் பட்டுள்ளது. மாநகர் பகுதி யில் இதுவரை முதல் தவ ணை தடுப்பூசி¬ ய 91 சதவீதம் பேர் போட் டுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 64 சதவீதம் பேர் போட்டுள்ளனர். 15 வயது முதல் 18 வயது  உடைய சிறுவர்கள் 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதுவரை 17,000 சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இதேப்போல் முன்களப்பணியாளர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலே போதும். அதேப்போல் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    அரசு பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சின்னசாமி ஆசிரியர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவரது மனைவி சண்முகா.  

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறுமுகம் மனைவியை பிரிந்து கடந்த 40 வருடமாக  ஈரோடு மாநகராட்சிக்குபட்ட மாணிக்கம் பாளையம் பகுதியில் பொரி வியாபாரம் செய்து வந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வேலை விஷயமாக சூளை பஸ் நிறுத்தம் வந்தார். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7-ந் தேதி தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு 103 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி 131, 9-ந் தேதி 149, 10-ந் தேதி 123, 11-ந் 242 ஆக பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் கடந்த 6 மாதமாக இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 056 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 92 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் 30 வயது இளம்பெண் ஒருவர் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதனால் மாவட்டத்தில் கொரோ னாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  713 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 1,019 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். ஆனால் நேற்று 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது,
     
    தொற்று பாதிப்பு ஏற்பட்ட இளம்பெண் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    அவருக்கு ஏற்கனவே இணை நோய் இருந்துள்ளது. அதுவுமில்லாமல் அந்த பெண் இதுவரை தடுப்பூசி எடுத்து  கொள்ளவில்லை.

    இதனால் அந்த பெண் இறக்க நேரிட்டது. எனவே இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். 

    அதேப்போல் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றனர்.

    சிகிச்சை பலனின்றி இறந்த குட்டியை தேடி தாய் சிறுத்தை ஊருக்கு வரும் என்பதால் கிராமமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    தாளவாடி:

    சிகிச்சை பலனின்றி  இறந்த குட்டியை தேடி தாய் சிறுத்தை  ஊருக்கு வரும் என்பதால் கிராமமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் அருகே உள்ள பங்களா தொட்டி என்ற கிராமத்தில் கார்த்திக் என்பவர் வீட்டின் பின்னால் மாட்டுக் கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். 

    நேற்று வழக்கம் போல் கொட்டகைக்கு சென்றபோது ஒரு சிறுத்தை குட்டி படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே இது குறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் குட்டி சிறுத்தையை பார்வையிட்டனர். 

    பிறந்த 3 மாதமே  ஆன பெண் சிறுத்தை குட்டி என்பதும், அது சோர்வுடன் இருப்பதையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். தாய் சிறுத்தை அந்த சிறுத்தை குட்டியை மாட்டுக்கொட்டகையில் விட்டு சென்றது தெரிந்தது.

    இதையடுத்து அந்த சிறுத்தை குட்டியை ஆசனூர் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவரால் சிறுத்தை குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை குட்டி பரிதாபமாக இறந்தது. 

    இதையடுத்து சிறுத்தை குட்டி  உடலை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.

    இந்நிலையில் தாய் சிறுத்தை தனது குட்டியை தேடி மீண்டும் பங்களா தொட்டி கிராமத்துக்குள் வரும் என்பதால் கார்த்திக் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    வனத்துறையினர் தாய் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. 

    இந்நிலையில் கடந்த  7-ந் தேதி தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு 103 ஆக பதிவானது. அதைத்தொடர்ந்து  8-ந் தேதி 131, 9-ந் தேதி 149, 10-ந் தேதி 123 ஆக பதிவாகி இருந்தது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் கடந்த 5 மாதமாக இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால்  பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 81 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.   

    கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை  712 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 776 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று  உறுதியான 242 தினசரி பாதிப்பில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

    நேற்று பாதிப்பு ஏற்பட்ட 140 பேருக்கும் லேசான அறிகுறிகளே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

    இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் இவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

    மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. மாநகராட்சியில் பெரும்பாலும்  தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
     
    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு என்று 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் இருப்பார்கள். அவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்கள் சிகிச்சை பெற நடவடிக்கை எடுப்பார்கள்.

    மேலும்  அவர்களுக்கு மருத்துவம் தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். அவர் களுக்கு மருத்துவம் சார்ந்த உதவி தேவைப்பட்டால் கட்டுப்பாடு அறை எண்கள் கொடுக்கப்படும். அந்த கட்டுப்பாட்டு அறையை அவர்கள் தொடர்பு கொண்டு தேவையான உதவிபெறலாம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    வீட்டின் முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
    பெருந்துறை:

    வீட்டின் முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

    பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமிகவுண்டர். இவரது மனைவி செல்லம்மாள் (75). 

    சம்பவத்தன்று செல்லம்மாள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது  ஒரு மர்மநபர் அங்கு வந்து திடீரென செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடியை பிடித்து பறிக்க முயன்றுள்ளார். 

    உடனே சுதாரித்துக்கொண்ட செல்லம்மாள் தாலிக்கொடியை கெட்டியாக சேலையுடன் சேர்த்து பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். அப்போது வீட்டிற்குள் இருந்த பேரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.  

    இதனைக்கண்ட அந்த மர்மநபர் உடனடியாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை துரத்தியும் அவரை பிடிக்க முடியவில்லை. இது குறித்து செல்லம்மாள் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது.
    ஈரோடு:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது. 

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதை அடுத்து  பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    ஈரோடு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கின் போது  தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து வருகின்றனர்.
     
    இந்நிலையில் நேற்று மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோல் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முககவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சித்தோட்டில் சண்டையை விலக்க சென்ற வாலிபர் தாக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மற்றொரு வாலிபரை கைது செய்தனர்.
    சித்தோடு:

    சித்தோட்டில் சண்டையை விலக்க சென்ற வாலிபர் தாக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மற்றொரு வாலிபரை கைது செய்தனர்.

    பவானி அருகே உள்ள சித்தோடு பேரோடு, ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. காஞ்சிக்கோவில் வெள்ளையன்காடு புதுகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (28). இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.

    இவர்கள் தாக்கி கொண்டதை கண்ட ராஜாவின் வீட்டின் அருகே குடியிருக்கும்  பெரியசாமி (32) என்பவர் இருவரையும் சமாதானம் செய்து சண்டையை தடுக்க முயற்சிசெய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அருகே இருந்த செங்கலை எடுத்து பெரியசாமியை  தாக்கினார். இதில் அவருக்கு தலை, முகம், மூக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் அவரது பல் உடைந்தது. அதேபோல் சேகருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் பெரிய சாமியை மீட்டு ஈரோடு அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி.  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை  கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள்அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி வள்ளலார் நினைவுதினம் மற்றும் 26-ந் தேதி குடியரசுதினம் ஆகிய நாட்களை முன்னிட்டு அரசு மது கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும்  மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் “மது விற்பனை இல்லாத நாளாக”  அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும்  மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும்.

    மேலும் அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும்நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்
    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஈரோட்டில் கடந்த 2 நாட்களில் 845 முன்கள பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஈரோட்டில் கடந்த 2 நாட்களில் 845 முன்கள பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இந்தியாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து உள்ளதால் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக 15 வயது முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கடந்த 2 நாட்களாக செலுத்தப்பட்டுவருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதாரதுறை பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் 9ஆயிரம் பேர் என மொத்தம் 24ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முன்கள பணியாளர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

    ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டார்களோ அதையே அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 845 முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

    இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் 15 வயது முதல் 18 வயதுடைய  72 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ×