search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களில் 845 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஈரோட்டில் கடந்த 2 நாட்களில் 845 முன்கள பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஈரோட்டில் கடந்த 2 நாட்களில் 845 முன்கள பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இந்தியாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து உள்ளதால் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக 15 வயது முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கடந்த 2 நாட்களாக செலுத்தப்பட்டுவருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதாரதுறை பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் 9ஆயிரம் பேர் என மொத்தம் 24ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முன்கள பணியாளர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

    ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டார்களோ அதையே அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 845 முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

    இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் 15 வயது முதல் 18 வயதுடைய  72 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×